குவைத், அக்.31 குவைத் பன்னாட்டு திமுக சார்பாக முப்பெரும் விழா -2021 காணொலி வாயிலாக நடைபெற்றது.
தாயகத்திலிருந்து சிறப்பு அழைப்பாளர் களாக அழைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மாநில அயலக அணி துணைச் செயலாளர் விஜயன் ராமகிருஷ்ணன், தலைமைக் கழக பேச்சாளர் திராவிட முன்னேற்ற கழகம் குடியாத்தம் குமரன் ஆகியோர் காணொலி வாயிலாக இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டனர்,
வரவேற்புரையை குடந்தை பஷீர் வழங்க, புதுக்கோட்டை பஷீர் அவர்கள் தலைமையேற்று நடத்த, முன்னிலையாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் பங்குபெற தந்தை பெரியார் விருதினை சித்தார்த்தனுக்கும், அண்ணா விருதினை முனசந்தை சிக்கந்தர் அவர்களுக்கும், கலைஞர் விருதினை மண்டல மதிவாணன் அவர்களுக்கும், பேராசிரியர் விருதினை க. சுப்பிரமணியன் அவர்களுக்கும், பாரதிதாசன் விருதினை அருவி கவிஞர் ஆனந்தி அவர்களுக்கும், சமூக சேவை பண்பாளர் விருதினை நெல்லை நா. பீர் மரக்காயர் அவர்களுக்கும், மனிதநேய பண்பாளர் விருதினை நாசர்சலாவுதீன் அவர்களுக்கும் வழங்கி மென்மேலும் உங்களது பணி தொடர வேண்டும் என குவைத் பன்னாட்டு தி.மு.க. வாழ்த்தியது.
இந்த நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் க.மீ. அன்பரசன், சிறுத்தை அறிவழகன், சிறுத்தை வெற்றியூர் மகிழன் செல்லதுரை, பகவதி அறக்கட்டளை சேகர், தமிழ் நேசன் ஆசிரியர், சீர்திருத்த சிந்தனைவாதி, தந்தை பெரியார் விருதினை முன்பு பெற்ற ஆசிரியர் அமானுல்லாக்கும், மற்றும் விருது பெற்ற அனைத்து நண்பர்களும் விருதினை ஏற்று உரை நடத்தியது மிகச் சிறப்பாக அமைந்திருந்தது என குவைத் உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் இரா.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment