கோவை, அக்.31 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்திவாசன், “நீட்” தேர்வு தோல்வி அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் கீர்த்திவாசன் ஏற்கெனவே மூன்று முறை நீட் தேர்வு எழுதியும் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.
இம்முறையும் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்தவுடன் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாணவரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்!
கழகத் தோழர்கள் மாவட்ட செயலாளர் தி.க.செந்தில்நாதன், மாவட்ட துணை செயலாளர் தி.க.காளிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் வெள்ளலூர் ஆ.பிரபாகரன், தொழிலாளர்அணி மாவட்ட தலைவர் சு.ஆனந்தசாமி, மண்டல மாணவர் கழக செயலாளர் மு.ராகுல், மாவட்ட மாணவர் கழக தலைவர் வெ.யாழினி, வெ. இளமதி ஆகியோர் மாணவரின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்!
No comments:
Post a Comment