கொரட்டூர், அக். 16- 2.10.2021 அன்று காலை 10 மணிக்கு காந்தியார் பிறந்த நாளில், கொரட்டூரில் பெரியார், அண்ணா, கலைஞர் பாசறையின் சார்பில் “காந்தியார் வழியில் திமுக” என்னும் தலைப்பில் 282ஆவது கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கு.சங்கர் தலைமை வகித்தார். ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசு முன்னிலை வகித்தார். பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையாற்றினார்.
காந்தியாரின் கொள்கைகளை நிறைவேற்றும் தி.மு.க. நல் ஆட்சியைக் கலைக்குமாறு குரல் எழுப்புவோருக்கு நல்ல பதிலைக் கூறி தோழர்கள் கருத்துரையாற்றினர்.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட திராவிடப் பரிதி - ஏமாவதி ஆகியோருக்கு வாழ்த்து கூறப்பட்டது. கலைஞர் மன்றத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில், ஜெ.பூவனன், உதயசூரியா, ஜெயலட்சுமி, வசந்தி, லோகேஷ், காமாட்சி, செந்தமிழ்செல்வி, பிச்சைமணி, வழக்குரைஞர் பன்னீர்செல்வம், அருள்வடிவேலன், எழில், கவிராஜ், சதீஷ்குமார், சுரேஷ், பகலவன், தேவி, இன்பநிலா, இளையநிலா, இதய நிலா, சூரியதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக இனிய நிலா நன்றி கூறினார்.
மதுரை திருமங்கலம் பெரியார் நாகம்மையார் நகரில் தந்தைபெரியார் பிறந்த நாள் விழா
மதுரை,அக்.16- மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் சாலையில் அமைந்துள்ள பெரியார் நாகம்மையார்நகரில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா சமூகநீதி தினமாக கொண்டாட பட்டது.
பெரியார் நாகம்மையார்நகரில் உள்ள அய்யா அவர்களின் முழுஉருவச்சிலைக்கு திராவிடர் கழக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தோழர் எரிமலை தலைமையில் திருமங்கலம் ஒன்றிய தலைவர் மு.சுந்தரராசன் முன்னிலையில் கழகத் தோழர்கள் மு. சு. அன்புமணி, மு.சு.வீரமணி, மு.சு.வைரமணி, தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் வலங்கை முத்துப் பாண்டி, கரிசல்பட்டி ஜெயராமன், சோணை முத்து, விடுதலை சிறுத்தைகள் சார்பில் சுப்பிரமணியன் மற்றும் திருமங்கலம் பகுதியை சார்ந்த கழகத் தோழர்கள் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் நாகம்மையார் நகரில் உள்ள பகுதியில் இனிப்பு வழங்கி சமூகநீதி நாள் பற்றி திருமங்கலம் ஒன்றிய தலைவர் மு. சுந்தரராசன் உரை நிகழ்த்தினார். அப்பகுதி மக்கள் அனைவரும் தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர் அய்யா பிறந்தநாள்சமூகநீதி நாள்விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment