இஸ்லாமாபாத், அக். 31- நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தவிர்த்து இதர பகுதி களில் சட்டப்படி பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது, 16 ஆக உள்ளது. இந்நிலையில் 'பெண் களுக்கு குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிக்கும்படி இஸ்லாம் மார்க்கத்தில் எங்கும் கூறப்பட வில்லை என்பதால், அந்த சட் டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, பழைமைவாதிகள் கோரி வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு, பாக்., ஷரியத் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந் தது. அப்போது அமர்வு அளித்த தீர்ப்பு: முஸ்லிம் நாடுகளில் பெண் களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிப்பது இஸ்லாத் திற்கு எதிரானது அல்ல.
எகிப்து, ஜோர்டான், மலே சியா, துனிசியா போன்ற பல முஸ் லிம் நாடுகளில் ஆண், பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திரும ணத்திற்கான நோக்கங்களில் இனப் பெருக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை முக்கியமானவை என இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.
ஒரு பெண் சுயாதிகாரத்துடன் வாழ, கல்வி அறிவு இன்றியமை யாதது. அதனால் தான் ஒவ்வொரு முஸ்லிமும் கல்வி அறிவு பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வி அறிவு, உடல் ஆரோக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட அம்சங்களுடன், மன ஆரோக்கியமும் திருமணத்திற்கு அவசியம். அதற்கு, பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயிப்பது முக்கியம். அதற்கான சட்டத்தை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment