தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’டிலிருந்து விலக்குக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மாநாடுகள் நடத்துவதெனவும், மக்கள் எழுச்சிப் போராட்டங்களை மேற்கொள்வது என்றும், 21.9.2021 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் ஆகிய பெருநகரங்களில் அனைத்துக்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் - கூட்டம் நடைபெற்றது.
வரும் 17.10.2021 அன்று (காலை) வேலூர், 18.10.2021 அன்று (மாலை) ராஜபாளையம், 19,10,2021 அன்று (மாலை) திண்டுக்கல், 20.10.2021 அன்று (மாலை) நாகப்பட்டினம், 21.10.2021 அன்று (மாலை) அரியலூரில் என இப்பிரச்சாரப் பயணக் கூட்டம் நடைபெறும்.
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment