மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
செப்டம்பர் 30, விடுதலை நாளிதழில் "வெற்றுச் சொல்லா திராவிடம்" எனும் கட்டுரை வாசித்தேன். பார்ப்பன ஏடுகள் திராவிடம் என்பதின் உண்மையை புரிந்து கொண்டே நம்மை சோதிக்கின்றன. ஒரு பொய்யை திரும்ப, திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்ற நப்பாசை பார்ப்பன ஏடுகளுக்கு.
பார்ப்பனர்கள் தான் இப்படி என்றால், நம் இனத்தில் இருந்து திராவிடத்தால் விழித்தெழுந்து, இனம் என்ற குகையில் சினம் காட்டும் துரோகிகளுக்கும் புரிய வில்லை. வரலாறு தெரியாத இவர்கள் புரட்டட்டும் வரலாற்றை.
உண்மைக்கு மாறாக தகவல் வந்தால் அதை ஆதாரத்துடன் விளக்குவது தான் திராவிடர் கழகத்தின் தலையாய பணி. எனவே நாங்கள் தூங்குகிறோம் என பார்ப்பனர்களும், சூத்திர குழப்பவாதிகளும் நினைக்க வேண்டாம்.
தூங்காமல் காவல் காப்பது தான் திராவிடர் கழகத்தின் பணி. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் என்பது தான் உண்மை.
"அகராதிகள் சொல்லும் திராவிடம்" என ஆதாரப் பூர்வமாக நமது கவிஞர் அவர்கள் எழுதியுள்ளது அருமை. பழங்காலம் முதல் தற்போது வரை உள்ள வற்றை எடுத்துகாட்டிய கவிஞர் அவர்களுக்கு நன்றி.
உண்மைத் தகவல்களை உடனே ஆதாரப்பூர்வமாக வெளியிட்ட "விடுதலை" நாளிதழுக்கும், கவிஞர்
கலி. பூங்குன்றனார் அவர்களுக்கும் நன்றி.
- மு.சு. அன்புமணி, மதுரை 625020.
No comments:
Post a Comment