லண்டன், அக். 16- இங்கிலாந் தில் 38 ஆண்டுகளாக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் சர் டேவிட் அமேஸ். 69 வயதான இவர் நேற்று (15.10.2021) தனது சொந்த தொகுதி யான எசக்ஸ் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றார். அங்கு அவர் தனது தொகுதி மக்களை சந்தித்து அவர் களுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார்.
அப்போது கோயி லுக்குள் கத்தியுடன் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென சர் டேவிட் அமேசை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இதை யடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கத்தி யால் குத்திய அந்த வாலி பரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
கோயிலுக்குள் எம்.பி. கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் கடும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.இந்த நிலையில், எம்.பி கொலை செய்யப்பட்ட சம்பவம் பயங்கரவாத செயல் என்று அந்நாட்டு காவல் தரப்பில் தெரிவிக்கப் பட் டுள்ளது. கொலை செய்த வாலிபர், சோமாலிய பாரம் பரியம் கொண்ட இங்கி லாந்து குடிமகன் என உள் ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
No comments:
Post a Comment