மும்பை, அக்.10 உத்தரபிரதேசத் தில் விவசாயிகள் மீதான தாக்கு தலை கண்டித்து மராட்டியத்தில் நாளை (11.10.2021) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனை ஆளும் கட்சிகள் கூட்டாக அறிவித்தன.
ஒன்றியஅரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.
லக்கிம்பூர்கேரி வன்முறை
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா, மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் காரை மோதினர். இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதை யடுத்து அங்கு ஏற்பட்ட வன் முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியானார்கள். விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா வின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியான இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
முழு அடைப்பு போராட்டம்
இந்தநிலையில் லக்கிம்பூர் கேரி வன்முறையை கண்டித்து மராட் டியத்தில் நாளை (11ஆம் தேதி) முழு அடைப்புக்கு ஆளும் கட்சி கள் அழைப்பு விடுத்து உள்ளன. இதுதொடர்பான முடிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மகாவிகாஸ் கூட்டணியின் அமைச்சரவை கூட்டத்தில் எடுக் கப்பட்டது.
இது குறித்து தேசியவாத காங்கிரசை சேர்ந்த அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்வது அவசியம் என முடிவு செய்து உள்ளோம். பா.ஜனதா கொடூ ரமாக நடந்து கொள்கிறது. விவசாயிகளை நசுக்க முயற்சி செய்கிறது. எனவே 11ஆம் தேதி மாநிலத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்றார்.இதேபோல சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ் அமைச்சர் பாலா சாகிப் தோரட்டும் மாநிலத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கூறினார்.
No comments:
Post a Comment