ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

· .பி. லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் குழு குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· காந்தியாரின் வற்புறுத்தலின்பேரில்தான் சவார்க்கார் விடுதலை கோரி ஆங்கிலேய அரசிடம் மன்னிப்பு கோரினார் என்கிறார் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· மனித உரிமைகள் பற்றி பிரதமர் மோடி பேசுவது கேலிக்குரியது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்.

தி டெலிகிராப்:

· மோடிக்குப் பதில் யார் என்பதைவிட மோடிக்கு பதில் எது என எதிர்க்கட்சிகள் மா நில உரிமைக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என கட்டுரையாளர் ஓம்கார் பூஜாரி கருத்து.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· பி.எம்.கேர்ஸ் நிதியம் குறித்து உரிய விளக்கதை ஒன்றிய அரசு அளித்திட உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தல்.

- குடந்தை கருணா

 

No comments:

Post a Comment