தமிழ்நாட்டின் பல்கலைக்கழ கங்களில் சமூக நீதி பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்த தமிழ் நாடு முதல மைச்சருக்கும், பிரச் சினையை அரசின் கவனத்திற்கு சிறப்பாக எடுத்துரைத்த தமிழர் தலைவர் அவர்களுக்கும் நன்றி.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்படும் எம்.டெக். பயோடெக் னாலஜி மற்றும் எம்.டெக். கம்ப்யூடேஷனல் பயா லஜி ஆகிய இரு பட்டமேற்படிப் புகளும், ஒன்றிய அரசு வழங்கி வந்த நிதியுதவி இந்த ஆண்டு திடீரென நிறுத் தப்பட்டது.
தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை முற்றிலுமாக மறுத்து ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பல் கலைக்கழகம் மறுத்ததால் இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துள்ளது என்றுதான் கருத வேண்டியுள்ளது.
இது மட்டுமன்றி, மதுரை காமராஜர், காரைக்குடி அழ கப்பா, கோவை பாரதியார் பல் கலைக்கழகங்கள் மற்றும் தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழ கங்கள் ஆகிய அரசு பல்கலைக்கழ கங்களும் மற்றும் சென்னை வேல் டெக் ரங்கராஜன் அறிவியல் தொழில்நுட்பக்கல்லூரி, திருச் செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி நேசனல் கல்லூரி ஆகிய தனியார் கல்லூரிகளும் நிதியுதவி என்ற பெயரில் 49.5% இடஒதுக்கீடு முறையை கடைப்பிடிக்க வேண் டிய தோடு மட்டுமல்லாமல் கூடு தலாக, உயர்ஜாதியில் வருமானம் குறைந்தோர்க்கான 10% EWS (Economically Weaker Section) இட ஒதுக்கீடு முறையையும் கடைப்பிடிக்க வேண்டிய சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்தியது.
இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான செயலாகும். இந்த சமூக அநீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் நட வடிக்கையையும், பல்கலைக்கழ கங்களின் செயல்பாட்டையும் திராவிடர் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் தமிழ் நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு சுட்டிக்காட்டி 7.10.2021 அன்று அறிக்கையை வெளியிட்டார். தமிழ்நாடு முதல மைச்சரும் இப்பிரச்சினை குறித்து உடன் இது குறித்து உரிய அறிவுறுத்தல் காரணமாக, தமிழ் நாட்டின் இட ஒதுக்கீடு கொள்கையான 69 சதவீதம் கடைப் பிடிக்கப் படும் என்றும், உயர் ஜாதி ‘அரியவகை ‘ ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு பின் பற்றப்பட மாட்டாது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெளிவுபட கூறியுள்ளார்.
எம்.டெக். படிப்பு மட்டுமன்றி ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பில் எந்த படிப்பு நடத்தப்பட்டாலும் அதிலும் தமிழ் நாட்டின் இட ஒதுக்கீடு கொள்கைதான் நிறை வேற்றப்படும் என்பதும் தற் போது உறுதியாகிவிட்டது.
தமிழ் நாடு சமூக நீதி மண்; தந்தை பெரியார் மண் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூக மாணவர் களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், இக் கோரிக்கையை தெளிவாக அரசின் கவனத்திற்கு எடுத் துச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், எமது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment