லண்டன், அக். 31- இங்கி லாந்து நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள கடற்கரைகளில் கடந்த சில நாட்களாக ஆயிரக் கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது.
திஸ்சைட், மார்க்ஸ்கி, சால்ட்பர்ன், நார்த் யார்க்ஷ்ரி, டிடன் கர்வி, ஹார்ட்லிபுல் மற்றும் சிஹம் ஆகிய கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக் கான மீன்கள், நண்டு, லாப்ஸ்டர் உள்பட பல் வேறு கடல்வாழ் உயிரி னங்கள் உயிரிழந்த நிலை யில் கரை ஒதுங்கியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் அமைப்பு கள் ஆய்வு செய்து வரு கின்றனர். கடல் நீரில் விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் ஏதேனும் கலக்கப்பட்ட னவா? கடல்நீர் மாசுபாட் டால் கடல்சார் உயிரினங் கள் உயிரிழந்து கரை ஒதுங்கினவா? பருவநிலை மாற்றத்தால் இந்த உயி ரிழப்புகள் ஏற்பட்ட னவா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இங்கிலாந்து கடற்கரையில் ஆயிரக் கணக்கான கடல்சார் உயிரினங் கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரப ரப்பை ஏற் படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment