நார்வே, ஆஸ்திரியா, ஸ்பெயினைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் தொழிலாளர் நலக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற உள்ளது.
இதன் மூலம் அய்ரோப்பாவில் வலதுசாரி - பழைமைவாத ஆட்சி முடிவிற்கு வருகிறது.
ஜெர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுகளின் படி மக்கள் பழைமைவாத வலதுசாரிகளை முற்றிலும் நிராகரித்து ஜனநாயக பொதுவுடமை அமைப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் தற்போதைய பிரதமர் ஏங்கலா மெர்க்கெலின் (Angela Merkel) கட்சியை 1.6 விழுக்காட்டு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது. தேர்தலில் பழைமைவாத வலதுசாரி கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் 25.7 விழுக்காடு வாக்குகளுடன் சமூக ஜனநாயகக் கட்சி முன்னிலையைப் பெற்றது. கன்சர்வேட்டிவ் கட்சி 24.1 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது.
இந்த தேர்தலில் இளைஞர்கள் அமைப்பும், முற்போக்கு ஆதரவு தொழிலாளர் அமைப்பும் இளைஞர்களின் ஆதரவை வெகுவாக பெற்று கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது, இவர்கள் சமூக ஜனநாயக கட்சியின் கொள்கைளோடு முழுவதும், ஒத்துப்போகும் இயக்கத்தினர் ஆதலால் அவர்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு கொடுத்து புதிய அரசு ஆட்சி அமைக்க உறுதுணையாக இருப்பார்கள்.
மேலும், சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவை பெருவாரியான மக்கள் தெரிவித்துள்ளனர். என்று அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஓலஃப் ஷோல்ட்ஸ் (Olaf Scholz) தெரிவித்துள்ளார்,
லத்தீன் அமெரிக்க நாடுகளில் நீண்ட காலமாக ஆண்டுவந்த முதலாளித்துவ ஆட்சிகள் ஒவ்வொரு நாடுகளிலும் முடிவிற்குவந்து அங்கு இடதுசாரி பொதுவுடைமை கட்சிகள் ஆட்சியில் அமர்ந்துவரும் வேளையில் அய்ரோப்பாவிலும் இந்த மாற்றம் தென்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment