பா.ஜ.க. பிரமுகர் சர்ச்சைப் பேச்சு: 99 ஆண்டு குத்தகைக்குத்தான் காந்தியார் சுதந்திரம் பெற்றுத் தந்தாராம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

பா.ஜ.க. பிரமுகர் சர்ச்சைப் பேச்சு: 99 ஆண்டு குத்தகைக்குத்தான் காந்தியார் சுதந்திரம் பெற்றுத் தந்தாராம்

லக்னோ, அக். 31 - இந்தியாவிற்கு 99 ஆண்டு குத்தகை அடிப்படையில்தான் காந்தியும், நேருவும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்திருப்பதாக பாஜக-வின் இளைஞர் பிரிவு நிர்வாகி ருச்சி பதக், ‘புதிய ஆராய்ச்சியைவெளியிட் டுள்ளார்.

.பி. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பாஜக-வின் யுவமோர்ச்சா வைச் சேர்ந்த ருச்சி பதக் பேசியுள்ளார். பல்வேறு கட்சிகள் மற்றும்  அமைப்புகளைச் சார்ந்த பிரதி நிதிகள் பங்கேற்ற இந்த விவாதத்தில், “இந்திய நாட்டிற்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லைஎன்று பேசி ருச்சி பதக் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளார். இதற்கு விவாதத்தில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் மத்தியி லிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலை யில், ‘எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள்?’ என்று தொலைக் காட்சி நெறியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.  அதற்கு பதிலளித்த ருச்சி பதக்,  இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இருந்த மிகப்பெரிய தலைவர்களான  நேருவும் பிரிட்டிஷ் அரசுடன் பேசி இந்தியாவிற்கு 99 ஆண்டுகளுக்கு லீஸ் (குத்தகை) அடிப்படையில்தான் சுதந்திரத்தை பெற்றனர். 1950-ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் வந்த பிறகு தான் இந்தியாவில் முதல் தேர்தல்  நடைபெற்றது. இந்த 99 ஆண்டுகள் குத்தகை தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும்

மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். வரலாறு தெரியாமல் எதையா வது உளறிக்கொட்டுவது பாஜக தலைவர்களின் வழக்கமாகிவிட்டது. அந்த வகையிலேயே ருச்சி பதக்கும் இந்த கருத்தைக் கூறியுள்ளார். அவ ரதுவரலாற்று அறிவைசமூக வலை தளவாசிகள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

.பி. காவல்துறைக்கு டில்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: சட்டவிரோத கைதுகளை நடத்த

இது ஒன்றும் உங்கள் மாநிலம் அல்ல!

புதுடில்லி, அக். 31 - இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது, உத்தரப் பிரதேச காவல் துறை மேற்கொண்ட கைது நடவடிக்கைக்கு டில்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத கைதுகளை நடத்த இது  ஒன்றும் .பி. மாநிலமல்ல; டில்லி!” என்றும் நீதிபதி முக்தா குப்தா கடுமையாக சாடியுள்ளார். இளைஞர் ஒருவர், தான் காதலித்த பெண்ணை கடந்த ஜூலை 1-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிப் போய் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுபற்றி அந்தப் பெண்ணின் பெற்றோர், .பி. காவல் துறையில் புகார் கொடுத்த நிலை யில், காவல்துறையினர் டில்லிக்குச் சென்று இளைஞரின் தந்தையையும், சகோதரரையும் கைது செய்தனர். 

இதுதொடர்பான வழக்கு, தனி நீதிபதி  முக்தா குப்தா முன்னிலையில் வியாழ னன்று விசாரணைக்கு வந்தது. .பி.  காவல்துறையின் சார்பில் துணை ஆய்வாளர் பங்கஜ் குமார் தியாகி நேரில் ஆஜரானார். அப்போது, நீதிபதி முக்தா குப்தா அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி, .பி. காவல்துறையை கடுமை யாகச் சாடினார். “பெற்றோர் புகார் கொடுத்தார்கள் என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் வயது  என்ன? மேஜரா, மைனரா? என்று விசாரித்தீர்களா..? இதுதொடர்பான ஆதாரங்களை பெண்ணின் பெற்றோர் தராத போது, தன்னிச்சையாக எப்படி கைது நடவடிக்கையில் இறங்கினீர்கள்...?

அதே போல இன்னொரு மாநிலத்திற்கு வந்து  கைது நடவடிக்கையில் ஈடுபடும்போது, கைதுக்கு முன்னரும் சரி, பின்ன ரும் டில்லி காவல்துறைக்கு ஏன், தக வல் தெரிவிக்கவில்லை?” என்று அடுக்கடு க்காக கேள்விகளை முன்வைத்த நீதிபதி முக்தா குப்தா, “சிசிடிவி பதிவில் .பி. காவல்துறையினர் டில்லிக்குள் நுழைந்தது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இதுபோன்ற சட்டவிரோதச் செயல் களையெல்லாம் உங்களது .பி.யில் வைத்துக் கொள்ளுங்கள். இது  டில்லி. இங்கெல்லாம் அது போன்ற சட்ட விரோதமான சட்டங்களை அமல்படுத்த முடியாதுஎன்றும் காட்டமாக கூறியுள்ளார்.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம்

 சென்னை, அக்.31  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.04க்கும், டீசல் ரூ.102.25க்கும் இன்று (31.10.2021) விற்பனை செய்யப்படுகிறது.

பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது.  பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய்  விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று (30.10.2021) லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.105.74க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.101.92க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.106.04க்கும் மற்றும் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து ரூ.102.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது

No comments:

Post a Comment