8 உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி 4.4% ஆக குறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

8 உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி 4.4% ஆக குறைவு

 புதுடில்லி, அக்.31 கடந்த ஆகஸ்ட் மாதம் 8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி 11.5% ஆக இருந்தது.

நிலக்கரி, இரும்பு, சிமெண்ட், ரசாயன உரம், மின்சாரம், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், கச்சா எண் ணெய் ஆகிய 8 உள்கட்டமைப்பு தொழில்களின் உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 11.5 சதவீதம் அதிகரித்திருந்தது.

ஆனால் செப்டம்பர் மாதத்தில் இவற்றின் உற்பத்தி 4.4 சதவீதமாக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி நிலக்கரி உற்பத்தி 8.1%, பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி 6%, இரும்பு உற்பத்தி 3%, சிமெண்ட் உற்பத்தி 10.8%, இயற்கை எரிவாயு 27.5%, மின்சார உற்பத்தி 0.3%, ரசாயண உரம் உற்பத்தி 0.02% அதிகரித்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.7% குறைந்துள்ளது.  நிலக்கரி உற்பத்தி 8.1% அதிகரித்தும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது, நிர்வாக சிக்கல்களை சுட்டிக்காட்டுவதாக உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் இந்த உள்கட்டமைப்புத் தொழில்களின் வளர்ச்சி விகிதம் 16.6 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த உள்கட்டமைப்புத் தொழில்களின் வளர்ச்சி விகிதம் 14.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment