லண்டன், அக். 31- கரோனா பரவல் அச்சத்தால் கொலம்பியா, டோமி னிக்கன் குடியரசு, ஈகுவேடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளையும் இங் கிலாந்து அரசு சிவப்பு பட்டியலில் வைத்திருந்தது. அந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற் றும் வர்த்தக ரீதியான செயல்பாடு களை மேற்கொள்ளவும் பல கட் டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்காக அந்த நாடுகளின் பெயர்களை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் சிவப்பு பட்டியலில் இருக்கும் 7 நாடுகளின் பெயர்களும் நீக்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment