சென்னை இளைஞருக்கு மறுவாழ்வு
சென்னை,அக்.9- மருத்துவ அறிவியல் வளர்ச்சியால், மனித அறிவாற்றல், மனிதநேயத்தின் காரணமாக உடல் உறுப்புக் கொடை மக்களிடையே பெருகிவருகிறது. மதுரையில் இருந்து 76 நிமிடத்தில் கொண்டு வரப்பட்ட நுரையீரலால் சென்னையைச் சேர்ந்த 34 வயது இளைஞருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு அடைந் ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவ்விளைஞ ரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு கொடை அளிக்க முன்வந்தனர். அதன் படி இதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள் சிறுநீரகங்கள் கொடையளிக்கப் பட்டன.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த 34 வயது இளைஞர் நுரையீரல் பாதிப்புடன் வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உடனடியாக நுரை யீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.எனவே மதுரை இளைஞரின் நுரையீரலை சென்னை இளைஞருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி மதுரையில் இருந்து சாலை மற்றும் ஆகாயம் மார்க்கமாக 425 கி.மீ. பயணித்து 76 நிமிடத்தில் நுரையீரல் போர்டிஸ் மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் நுரை யீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கோவினி பாலசுப்பிரமணி தலைமையிலான மருத்துவர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதன் வாயிலாக சென்னை இளை ஞருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment