தமிழ்நாட்டில் புதிதாக 7 இடங்களில் அகழாய்வு: தொல்லியல் துறை முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

தமிழ்நாட்டில் புதிதாக 7 இடங்களில் அகழாய்வு: தொல்லியல் துறை முடிவு

சென்னை,அக்.10- தமிழ்நாட்டில் புதிதாக ஏழு இடங்களில் அகழாய்வு செய்ய, தமிழ்நாடு தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், இந்தாண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை, 10 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தன.

அவற்றில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அகழாய்வு பற்றிய இடைக்கால அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக ஏழு இடங்களில் அக ழாய்வுப் பணிகளை நடத்தவும், பழைய இடங் களில் அகழாய்வுகளை தொடரவும், தமிழ்நாடு தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, ஒன்றிய தொல்லியல் ஆலோசனை வாரியமான, 'கபா'விடம் அனுமதி கோர உள்ளது. இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. தமிழ்நாட்டின் வேண்டுகோளுக்கு அனுமதி கிடைத்தால், அடுத்தாண்டு பொங்கலுக்குப் பின், புதிய உத்வேகத்துடன், அகழாய்வுப் பணிகள் தொடங்க அதிகாரிகள் திட்டமிட் டுள்ளனர்.

No comments:

Post a Comment