அமெரிக்கா, அக். 16- வேற்று கிரகவாசிகளால் 60 ஆண்டு களுக்கு முன்பே மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டது என அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
ராபர்ட் சலாஸ், அமெரிக் காவின் மூத்த ராணுவ அதி காரி ஆவார். இவர் அங்கு விமானப்படையின் உயர் பதவியில் பணியாற்றியிருக்கிறார். இவர் அணு ஆயுதங் களை வேற்றுகிரகவாசிகள் திருடிச் சென்றதை தான் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அமெரிக்க விமானப்படையை சேர்ந்த தலைவர்கள் நான்கு பேர் இது குறித்த ஆவணங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மார்ச் 24,1967 ஆம் ஆண்டே வேற்றுக் கிரகவாசிகள் இங்கு வந்து அணு ஆயுத அமைப்புகளில் மாற்றம் செய்து அதனை முடக்கிவிட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.
ராபர்ட் சலாஸ் அமெரிக்க விமானப்படையில் ஆயுத கட்டுப்பாட்டாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும், அவர் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை பிரிவுக்கான கமாண்டராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வகுப்புவாத கலவரம்; பத்திரிகையாளர் உள்பட 3 பேர் சாவு
டாக்கா, அக். 16- வங்காளதேச நாட்டில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் அந்நாட்டில் சமீபத்தில் காணொலி ஒன்று வைரலானது.
இதன் தொடர்ச்சியாக திகிர்பார் என்ற இடத்தில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடி கூட்டம் ஒன்றை நடத்தின. இந்த சூழலில், கும்பல் ஒன்று மண்ட பம் என்ற இடத்தில் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 60 பேர் காயமடைந்து உள் ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இதனைத் தொடர்ந்து 144 தடை உத்தரவும் அந்த பகுதியில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment