மக்களை நோக்கி அம்புகளை எய்து 5 பேரை கொன்ற நபர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

மக்களை நோக்கி அம்புகளை எய்து 5 பேரை கொன்ற நபர் கைது

ஓஸ்லோ, அக். 16- அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள நகரம் காங்ஸ்பெர்க். கடந்த 13.10.2021 அன்று இரவு இந்த நகரம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண் டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு வீதியில் வில் அம்புடன் வலம் வந்த நபர் ஒருவர் திடீரென மக் களை நோக்கி அம்புகளை எய்தார்.

இதனால் அங்கு பெரும் பதற்ற மும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து மக்களை நோக்கி அம்புகளை எய்து கொண்டே இருந்தார். இதில் 8 பேரின் உடலில் அம்புகள் துளைத்து ரத்த வெள் ளத்தில் சரிந்தனர். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர்.

இதனிடையே இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைதொடர்ந்து, இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேரையும் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து சில மைல் தொலைவில் பதுங்கியிருப்ப தாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாக்கு தல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர். முதற்கட்ட விசாரணை யில் தாக்குதல் நடத்திய அந்த நபர் டென்மார்க்கை சேர்ந்த 37 வய தான எஸ்பென் ஆண்டர்சன் பிரா தன் என்பது தெரியவந்துள்ளதா கவும் தாக்குதலுக்கான காரணம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசா ரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment