கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, அக். 17- கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங் கினார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எவர்வின் பள் ளியில் நேற்று (16.10.2021) பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் கலந்துகொண்டு 16 மாற்றுத் திறனாளி களுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத் தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, 2 பயனாளிகளுக்கு வங்கி கடன் மானியம், 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 197 பயனாளிகளுக்கு முதியோர் ஓய் வூதியம், கணவனால் கைவிடப்பட் டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூ தியம் பெறுவதற்கான ஆணைகள், சாலை விபத்தில் உயிரிழந்த குடும் பத்தைச் சேர்ந்த 312 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, கரோனா தொற் றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி என மொத்தம் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, கொளத்தூர், பெரியார் நகர், மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கியின் சார்பில் வழங் கப்பட்ட ஒரு அவசரகால ஊர்தியையும், கரோனா தடுப்பூசி பணிக்காக 2 வாக னங்களின் சேவைகளையும் முதலமைச் சர் மு..ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து, 210 பேர் அமரக் கூடிய 3 இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகளையும் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

பின்னர், கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் உள்ள சென்னை மாநக ராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு..ஸ்டாலின் 70 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 34 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப் பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, அரசு உயர் அலுவலர்கள், தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கியின் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண் டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment