56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை, அக். 17- மின்வாரியத் தில் காலியாக உள்ள  56 ஆயி ரம் பணியிடங்கள் முன் னுரிமை யின் அடிப்படையில் நிரப்பப்படும் என்று அமைச் சர் செந்தில் பாலாஜி தெரிவித் துள்ளார். தஞ்சாவூர் அருகே அற்புதப்புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்த மின் சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் களிடம் கூறியதாவது:

மாதந்தோறும் மின் கட்டணத்தைக் கணக்கிடுவது தொடர்பாக தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், ஒவ்வொரு வீட்டுக்கும் "ஸ்மார்ட் மீட்டர்" பொருத்துவது தொடர்பாகவும், அதேசமயம் மின் கணக் கீட்டாளர் பணி  நியமனம் தொடர்பாகவும் பரிசீலனை யில் உள்ளது. இதில், எந்த அளவுக்குச்  சாத்தியக்கூறுகள் உள்ளதோ, அதைப் பொறுத்து நிச்சயம் நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும். தற்போது, கணக்கீடு செய்யக்கூடிய பணியாளர் கள் 50 விழுக்காடு அளவில்தான் உள்ளனர்.

கடந்த 5 மாத ஆட்சிப் பொறுப்பேற்று  5 மாத காலத்தில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 தேர்தல் வாக்குறுதிகள்  முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்படுவது வருந்ததக்கது.  வருங்காலத்தில் தரமான மின் கம்பி கள் அமைக்கப்பட்டு, அதற்கான கட்ட மைப்புகள் வலுப் படுத்தப்படும். மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்  பணியிடங்கள் உள்ளன. முன்னுரிமை யின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப் பப்படும். மின்வாரியம் 1 லட்சத்து 59  ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.  இதற்கு ஆண்டு 16 ஆயிரம் கோடி  ரூபாய் அளவுக்கு வட்டி செலுத்தக் கூடிய நிலையில், அதிகபட்ச வட்டிக்கு கடந்த ஆட்சி யாளர்கள் கடன் வாங்கி உள்ளனர். இதெல்லாம் சீரமைக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இப்போது அவசர அவசியம் கருதி, எந்தெந்தப் பணியிடங்கள் தேவையோ அவை நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 19 புதிய நகராட்சிகள் உருவாகிறது!

சென்னை,அக்.17- தமிழ்நாட் டில் 19 புதிய நகராட்சிகளையும், கும்ப கோணம் நகராட்சியை மாநகராட்சியாகவும் உரு வாக்கு வதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங் கல் கூடுதல் தலைமைச் செய லாளர் சிவதாஸ் மீனா பிறப்பித் துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை, பரப்பளவு உள்ளிட்டவை கொண்டு பேரூராட் சிகள், நகராட்சி கள், மாநகராட்சிகளாக பிரிக்கப்படுகின்றன. அதன்  படி தற்போது 15 மாநகராட்சிகள், 121 நகராட்சி கள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றின் வளர்ச்சியை பொறுத்து பேரூராட்சிகள் நகராட்சி களாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், தரம்  உயர்த்தப்படுகின்றன. ஒரு சில பேரூராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாகவும் அறி விக்கப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் 19 புதிய நகராட்சி களையும், கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சி யாகவும் உருவாக்குவதற்கான உத்தரவை நகராட்சி  நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலை மைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி, கும்பகோணம் நகராட்சி தரம் உயர்த்தப் பட்டு 16-வது மாநகராட்சியாக உதய மாகிறது.

கும்பகோணம் நகராட்சியுடன் தாராசுரம் பேரூராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய கும்ப கோணம் மாநகராட்சிக்கான வார்டுகளும் வரை யறை செய்யப்படுகிறது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லாங்கோடு மற்றும் ஏழுதேசம் அடங்கிய பேரூ ராட்சிகள் இணைக்கப்பட்டு கொல்லங்கோடு நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.  கரூர் மாவட்டத் தில் புஞ்சை புகளூர், தமிழ்நாடு காகித ஆலை புகளூர் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து புகளூர்  நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, லால்குடி, சேலம் மாவட்டம் தாரா மங்கலம், இடங்கணசாலை, திருவள்ளூர் மாவட்டம்  திருநின்றவூர், பொன்னேரி, கடலூர் மாவட்டம்  திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினம், தூத்துக்குடி மாவட் டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர் மாவட்டத்தில் பள்ளம் பட்டி, திருப்பூரில், திருமுருகன் பூண்டி ஆகிய பேரூ ராட்சிகள் 19 புதிய நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 139 நகராட்சி களாக எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் ஏற்க னவே அறிவிக் கப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி யுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர்,  ஆளூர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக் கப்படுகின்றன.

தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 3,742 பேர் உயிரிழப்பு

புதுடில்லி, அக். 17- இந்திய ரயில்வேயில் கடந்த 2019-20ஆம் நிதி ஆண்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 8,372 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 3,742 பேர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

ரயில்வேயில், ரயில் விபத்துகள் மற்றும் ரயில்வே கிராசிங் விபத்துகள் என்று 2 வகையாக விபத்துகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில்,ரயில் விபத்துகளால் இறப்பு தற்போது குறைந்துவருகிறது. ஆனால், ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறி வாகனங்கள் மூலம் ரயில் பாதைகளைக் கடந்து செல்வது, அலைபேசியில் பேசிக் கொண்டே பாதைகள் அருகே நடந்து செல்வது, சிக்னல் விதிகளை மீறுவது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதைத் தொடர்ந்து, விதிமுறைகள் மீறப்படுவதைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களுக்கு சுற்றுச்சுவரு டன் நவீன கதவுகள்கள் அமைத்தல், சுரங்கப்பாதைகள் அமைத்தல், மேம்பாலம் கட்டுதல், தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்து வது என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இருப்பினும், பாதுகாப்பு விதிகளை மீறப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே வரு கின்றன. கடந்த 2019-2020ஆம் நிதி ஆண்டில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 8,372 பேர் உயிரிழந் துள்ளனர். இதில், அதிகபட்சமாக 3,742 பேர் ரயில் தண்ட வாளங்களைக் கடக்கும்போது உயிரிழந்துள்ளனர். மேலும், 1,078 பேர் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment