புதுடில்லி, அக். 16- ஊழியர்களை சிறப்பாக நடத்தும், உலகளவிலான நிறுவனங்களின் 2021ஆம் ஆண் டுக்கான பட்டியலை ‘போர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் ‘ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ்’ இந்திய நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது. போர்ப்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்களின் உலக ளாவிய பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஆய்வுநிறுவனங்களின் ஊழியர்களிடம் பல்வேறு விஷ யங்கள் குறித்து ஆய்வு நடத்தி, போர்ப்ஸ் இந்த பட்டியலை தயாரித்து வெளியிடும்.
இந்த பட்டியலில் மொத்தம் 750 நிறுவனங்கள் பட்டியலிப்பட் டுள்ளன.இதில், ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் உலகளவில் 52ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அய்.சி.அய்.சி.அய்., வங்கி 65 இடத் தையும், எச்.டி.எப்.சி., வங்கி 77ஆவது இடத்தையும், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் 90ஆவது இடத் தையும் பிடித்துள்ளன.பாரத ஸ்டேட் வங்கி 119ஆவது இடத் தையும், எல் அண்டு டி., 127ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
இன்போசிஸ் 588ஆவது இடத் தையும், டாடா குழுமம் 746ஆவது இடத்தையும், எல்.அய்.சி., 504ஆவது இடத்தையும் பிடித்து உள்ளன. சமத்துவம் உலகளவில் ‘சாம்சங்’முதலிடத்தை பிடித்துள் ளது. அடுத்து அய்.பி.எம்., மைக் ரோசாப்ட், அமேசான், ஆப்பிள், ஆல்பபெட், டெல் டெக்னாலஜிஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சீனாவைச் சேர்ந்த ‘ஹூவாவே’ உலகளவில் 8ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 58 நாடுகளில், 1.5 லட்சம் ஊழியர்களை கொண்டு, 750 நிறுவனங்கள் கொண்ட இந்த பட்டியல் தயாரிக் கப்பட்டுஉள்ளது.
ஆய்வில் பங்கேற்றோரிடம் நிறுவனத்தின் இமேஜ், பொருளா தார செயல்பாடு, திறன் மேம்பாடு, பாலின சமத்துவம் மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்ற பல அம்சங்கள் குறித்து மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment