நியூயார்க், அக்.30 உலக அளவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.67 கோடியாக (நேற்று 29.10.2021 - 24.62 கோடி) உயர்ந்து உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,67,24,601 பேருக்கு (நேற்று 24,62,44,872 பேர்) கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,35,14,909 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50 லட்சத்து 3 ஆயிரத்து 934 பேர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment