முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் வெளியேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் வெளியேற்றம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை, அக்.31 முல் லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ள தாகவும், வினா டிக்கு 500 கனஅடி வீதம் நீர் வெளி யேற்றப்பட்டு வருவதாக வும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் 29.10.2021 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரையில் நீரை தேக்கி வைக்க வழங்கிய ஆணையின் படியும், ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாதவாரி யான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் முல் லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகிய வைகளை தொடர்ந்து தமிழ் நாடு கண்காணித்து வருகிறது.

கேரளாவைச் சார்ந்த தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக் கில் உச்சநீதிமன்றம் 28.-10.-2021 அன்று தமிழ்நாட்டின் வாதங் களை கேட்டபின், 11-.11.-2021 அன்று மீண்டும் விசா ரணைக்கு வரும்வரை, ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப் பட்ட நீர்மட்ட அட்ட வணையை பின்பற்றுமாறு ஆணையிட் டுள்ளது.

தமிழ்நாடு, நிர்ணயிக்கப் பட்ட அட்டவணையின் படியே நீர்மட்டத்தை பரா மரிப்பதற்காக, வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகைபாதை வழியாக கடத்து கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், தமிழ் நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை எடுத்த முடிவின்படி, வைகை அணைக்கு குகைபாதை வழியாக அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீரோடு, கேரள அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் அறிவிப்பு அளித்தபின் இன்று (29.10.2021) காலை 7.30 மணிக்கு முல்லைப் பெரி யாறு அணையின் இரு வழிந் தோடி மதகுகளை திறந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது.

நீர்வளக் குழுமம் ஒப்புதல்

இது, ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித் துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாத வாரியான அணை யின் நீர் மட்ட அட்ட வணையை பின் பற்றியே செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப் பாக உள்ளது. ஒன்றிய நீர் வளக் குழுமம் ஒப்புதல் அளித் துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப் படி, தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையினை கவனமாக இயக்கி வருகிறது. இதற்கு புறம்பாக வரும் எந்த தகவலும் உண்மையானவை அல்ல என்பதால், அவை புறக் கணிக்கப்பட வேண்டியவை ஆகும். தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரி யாறு அணை, நிலையான வழிகாட்டு தல்களின்படி முறையாக இயக் கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

No comments:

Post a Comment