புதிய மின்சாரக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ பயணிக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

புதிய மின்சாரக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ பயணிக்கும்

லண்டன்,  அக்.1 பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சாரக் காரை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட காராக புதிய மின்சாரக் கார் இருக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறி உள்ளார். 100 கி.வாட் பேட்டரி கொண்ட இந்த மின்சாரக் காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500  கி.மீ தூரம் பயணம் செய்யலாம் என அந்நிறுவனம் கூறி உள்ளது.

மின்சார காரின் விலை விவரத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஏற்கெனவே ரோல்ஸ் ராய்ஸ், அடுத்த 20 ஆண்டுகளில் தனது அனைத்து மாடல் கார்களையும் மின்சாரக்கார்களாக மாற்ற உள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment