லண்டன், அக். 17- மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு தனியார் கரோனா பரிசோதனை மய்யமானது தவறான முடிவுகளை வழங்கியுள்ளது. அதாவது கடந்த அக்டோ பர் 12 வரை 43,000 பேருக்கு இந்த மய்யத்தால் தவறான முடிவுகள் வழங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் இந்த மய்யத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் மீண்டும் ஒரு முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி அந்நாட்டு அரசு கூறியுள்ளது,
தவறான கரோனா முடிவுகளால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நிலையில் அரசானது, தவறு செய்த பரிசோதனை மையத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் தவறான முடிவுகள் ஏற்பட காரணம் என்ன என்பது பற்றி சம்மந்தப்பட்ட தனியார் பரிசோதனை மய்யத்திடம் விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் இந்தியருக்கு முக்கிய பதவி
வாசிங்டன், அக். 17- அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை அதிபர் ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார்.
இவர் இதற்கு முன்பாக அமெரிக்க போக்குவரத்து துறையில் முக்கிய பதவியில் இருந்துள்ளார். 1993 முதல் 2015 வரையில் அமெரிக்க விமானப்படையில் அதிகாரி யாக பணியாற்றி உள்ளார். சி-17 ரக போர் விமானத்தில் விமானியாக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்து உள்ளார்.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இவர் அமர்த்தப்படுவதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment