ஜெனீவா, அக். 31- சீனாவின் உகான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் உருமாறிய டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறி யப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியதாகும். இந்த வைரஸ் இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆந்திராவில் 7 பேருக்கும், கேரளாவில் 4 பேருக்கும், தெலுங்கானாவிலும், கருநாடகத்திலும் தலா 2 பேருக்கும், மராட்டியத்திலும், ஜம்மு காஷ்மீரிலும் தலா ஒருவருக்கும் என மொத்தம் 17 பேருக்கு பாதித்துள்ளது. இந்த வைரஸ் அதிகளவில் இங்கிலாந்தில்தான் பரவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்வு
கான்பெர்ரா, அக். 31- ஆஸ்திரேலியாவில் 92 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன் காரணமாக அங்கு கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்ட கரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
குறிப்பாக கான்பெர்ரா நகரில் கலை மற்றும் பொழுது போக்கு அரங்குகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை 75 சதவீத இருக்கையுடன் அனுமதிக்கப்படுகிறது. உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் குழு விளையாட்டுகள் மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியர் கள் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் கான்பெர்ராவில் உள்ள மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பால், அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி யில் உள்ளனர். கரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ஆஸ்திரேலியர்கள் மிக வும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment