சென்னை, அக்.1 அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 4ஆம்தேதி (திங்கட்கிழமை) முதல் வகுப் புகள் தொடங்க வேண் டும் என்று கல்லூரிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார்.
கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு இணையம் மூலம் வகுப்புகள் நடத் தப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் 1ஆம்தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் முதலாம் ஆண்டு மாண வர்களை தவிர மற்ற அனைத்து மாணவர் களும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அறி வுறுத்தப்பட்டனர்.
முதலாம் ஆண்டு மாண வர் சேர்க்கை பெரும் பாலான கல்லூரிகளில் நடந்து முடிந்து உள்ள தால், அவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று மாணவ-மாணவிகள், பெற்றோர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதுதொடர்பாக கல்லூரிக்கல்வி இயக்குநர் பூரணசந்திரன், அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர்கள், அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கு அனுப் பியுள்ள உத் தரவில் கூறியிருப்ப தாவது:-
2021-2022ஆம் கல்வி யாண்டின் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாண வர்களுக்கு வருகிற 4ஆம் தேதி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக சேர்க்கப் பட்ட மாணவர்களுக்கு புத்தொளி பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கல்லூரி வளாகங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தவ றாது பின்பற்ற வேண்டும். இவ் வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment