கோயம்பேடு மேம்பால பணி வருகிற 31ஆம் தேதிக்குள் முடிவடையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

கோயம்பேடு மேம்பால பணி வருகிற 31ஆம் தேதிக்குள் முடிவடையும்

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

சென்னை, அக்.17- .தி.மு.. ஆட்சி யில் தாமதமான கோயம்பேடு மேம்பால பணி வருகிற 31ஆம் தேதிக்குள் முடிவடையும், என அமைச்சர் ..வேலு கூறியுள் ளார். தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் .. வேலு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் தமிழ்நாடு அர சால் பாலப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கோயம்பேட்டில் உயர் மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இந்த பணி ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் 29.9.2015 அன்று தொடங்கப்பட்டது. இந்த பணி 28.6.2018 அன்று முடிக்கப் பட்டிருக்க வேண்டும். இந்த உயர்மட்ட மேம்பாலப் பணியுடன் சேவை சாலைக்கு நிலம் கையகப் படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்க வேண் டும். ஆனால் உங்கள் ஆட்சியில் எதுவும் அது நடைபெறவில்லை.

முதலமைச்சராக மு..ஸ்டா லின் ஆட்சி பொறுப்பேற்ற பின், அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் நேரடியாக 2 முறை பார்வையிட்டு இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினேன்.

அதில் கட்டப்பட்டிருந்த கட் டடத்தையும், ஆக்கிரமிப்புகளை யும் சில நாள்களுக்கு முன்புதான் அகற்றினோம். இந்த பணிகள் எதையும் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக காலத்தை வீணாக கடத்தியது உங்கள் அரசு தான். எனவே இறுதிக்கட்ட பணிகளை இந்த அரசு வருகிற 31ஆம் தேதிக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கோயம்பேடு மேம்பாலம் கொண்டுவரப்படும்.

வேளச்சேரி புறவழிச்சாலையில் 29.06.2012 அன்று ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கான உத்தரவு வழங்கப்பட் டது. மூன்று ஆண்டு கால தாம தத்துக்கு பின்னர் 23.12.2015இல் ஒப்பந்தகாரர் பணியை தொடங் கினார். இந்த பணி ஒப்பந்தப்படி 22.9.2018இல் முடித்திருக்க வேண் டும். பணியை முடிக்க வேண்டிய காலம் முடிந்த பின்னர் 23 மாதங்கள் உங்களுடைய ஆட்சி தான். தி.மு.. அரசு பொறுப்பேற்ற பின் அப்பணிகளை நேரடியாக களத்தில் ஆய்வு செய்தேன். வேளச் சேரி மேம்பாலப்பணியின் 2ஆம் அடுக்கை வருகிற 31ஆம் தேதிக் குள்ளும், முதல் அடுக்கை வருகிற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக் கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்த தாரருக்கும் அறிவுரை வழங்கி னேன். 2ஆம் அடுக்கு இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மேடவாக்கம் மேம்பாலப்பணி மதிப்பீடு ரூ.133.10 கோடியில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் தேதி வழங்கப்பட்டது. இப்பணிக் கான உத்தரவு 8.1.2016இல் சன் ஷைன் நிறுவனத்துக்கு வழங்கப் பட்டது. ஒப்பந்தக்காரர் பணியை செயல்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததால் ஒப்பந்தம் 14.8.2018இல் ரத்து செய்யப்பட்டது. மறுபடியும் ஒப்பந்தம் கோரி ரெனாட்டஸ் நிறுவனத்துக்கு 12.12.2018இல் பணி உத்தரவு வழங்கப்பட்டது. இந் நிறுவனம் 12.9.2020-க்குள் பணியை முடித்திருக்க வேண்டும். ஆனால், இப்பணி முடிக்கப்படவில்லை. இதற்கு பின்னர் 8 மாத காலம் ஆட்சியில் இருந்தது .தி.மு.. தான்?.

மேடவாக்கம் சாலை மேம்பால பணியை வருகிற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்கும்படி அதிகாரி களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். ஒப்பந்த காலத்துக்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி பழனிசாமி அரசு தான். இன்று போக்குவரத்து நெரிசலை குறைத் திட சாலை மேம்பாலப்பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாக போலிக் கண்ணீர் வடிப்பது ஏன்?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment