சென்னை, அக்.17 தமிழ்நாட்டில் மழைக்காலம் தீவிரமடைந்துள்ள தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு இதுவரை 3,187 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மருத்துவமனைகளில் 351 பேர் சிகிச்சையில் இருப்ப தாகவும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று பரவல் கட்டுப் படுத்தப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை களில் இருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ண னிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது:
தமிழ்நாட்டில் 2012, 2013, 2015, 2017 ஆம் ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. குறிப்பாக மதுரையில் மேலூர் உள்ளிட்ட சில பகுதியில் டெங்கு பாதிப்பு பெருமளவில் காணப் பட்டது. அதன்பின் இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த மழை சீசனில் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். நடப்பு ஆண்டு ஜனவரி முதல் இப்பாது வரை 3,187 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 351 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை களில் சிகிச்சையில் உள்ளனர்.
2012, 2017 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது டெங்கு காய்ச்சல் தாக்கம் தமிழ்நாட்டில் குறைவாகத் தான் உள்ளது.
வீடு, அலுவலகங் களில் மழை தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது தொடங்கியுள்ள வட கிழக்கு பருவமழை டிசம்பர் வரை காணப்படும். அதனால், இந்த நோயைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு கொசு, நல்ல தண்ணீரில் வளரக்கூடியது. இந்தக் கொசு 500 மீட்டர் அளவில்தான் பறக்கும். அதனால், இந்த நோயைக் கட்டுப் படுத்துவது மிக எளிது.
மக்கள் விழிப்புடன் இருந்தால் டெங்கு பாதிப்பை முழுமையாக தடுத்து விடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment