பின்வாசல் வழியாக 31 பேரை ஒன்றிய அரசுப்பணியில் நுழைத்த பா.ஜ.க. அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

பின்வாசல் வழியாக 31 பேரை ஒன்றிய அரசுப்பணியில் நுழைத்த பா.ஜ.க. அரசு

புதுடில்லி, அக்.10 முக்கிய செயலாளர் பணிகளுக்கு 31 பேரை சட்டத்திற்குப் புறம்பாக பணி அமர்த்தியுள்ளது ஒன்றிய அரசு.

ஒன்றிய அரசின் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் உண்மையில் நேர்மையானவையாக உள்ளதா என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

 ஒன்றிய அரசு தேர்வாணையம்  31 அதிகாரிகளை இணைச் செயலாளர்கள். இயக்குநர்கள் மற்றும் பல்வேறு ஒன்றிய அமைச்சரவை மற்றும் துறைகளில் செயலாளர்கள் பதவியில் வரம்புமீறி தகுதியில்லாதவர்களுக்கு பதவி வழங்கி உள்ளது.

  31 பேரில் மூன்று இணைச்செயலாளர்கள் 19 இயக்குநர்கள் மற்றும் 9 துணைச்செயலாளர்களை ஒப்பந்த அடிப்படையிலும் நிரந்தர அரசு பதவியிலும் நியமித்துள்ளனர்.

முக்கிய துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு  கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தது. தகுதியான இவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் இதர அரசு விதித்திருந்த தகுதியின் அடிபப்டையில் ஒன்றிய அரசின் தேர்வாணை வாரியம் பரிந்துரை செய்திருந்தது.

அவர்களில் ஒப்பந்த அடிப்படையில் 295 பதவிகள் இணைச்செயலாளர் மற்றும் 1247 இயக்குநர்கள் பதவிக்கான நபர்கள் தேர்வாகி இருந்தனர்.  இதில் 231 பேருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டதில் 31 பேருக்கு பரிந்துரை அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 தேர்வுத்துறையின் பரிந்துரையில் வராத 31 பேரில் கல்விஅமைச்சரகம், எஃகுத்துறை, புள்ளியியல் மற்றும் நிர்வாக மேம்பாடு, பொதுத்துறை, வனத்துறை, சுற்றுச்சூழல்,  துறைமுகம், கப்பல் போக்குவரத்து, பொதுப் போக்குவரத்து மற்றும் நகர் புற வளர்ச்சித்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

 எந்த ஒரு அரசு தேர்வுச்சட்டவிதி வரம்புகளுக்கும் வராத இந்த 31 பேருக்கு எதனடிப்படையில் பதவி வழங்கப்பட்டது என்று தேர்வாணையம் பதில் கூறாமல் மவுனம் சாதிக்கிறது.

 

No comments:

Post a Comment