டில்லியில் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவையொட்டி நவ. 26 வரை திருச்சியில் 46 நாட்கள் விவசாயிகள் தொடர் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 14, 2021

டில்லியில் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவையொட்டி நவ. 26 வரை திருச்சியில் 46 நாட்கள் விவசாயிகள் தொடர் போராட்டம்

திருச்சி, அக். 14- வேளாண் சட்டங் களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 46 நாட் கள் தொடர் பட்டினிப் போராட் டத்தை திருச்சியில் தொடங்கி யுள்ளனர்.

‘’வேளாண் சட்டங்களைத் திரும் பப்பெற வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணி கள், வீணாகாமல் தடுக்கும் வகை யில் உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவ சாயிகளை காரால் மோதிக் கொன் றவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண் டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, சங்கத்தின் மாநிலத் தலை வர் பி. அய்யாக்கண்ணு தலைமை யில் விவசாயிகள் இந்தப் போராட் டத் தில் ஈடுபட்டுள்ளனர்.

பொது இடத்தில் பட்டினிப் போராட்டத்துக்கு காவல்துறையி னர் அனுமதி மறுத்ததை அடுத்து, சங்கத்தின் மாநில அலுவலகமான தனது வீட்டு வளாகத்திலேயே அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பட்டினிப் போராட்டம் இருந்து வருகின்றனர்.

போராட்டம் குறித்து அய்யாக் கண்ணு கூறும்போது, "டில்லி விவசாயிகள் போராட்டத்துக்குப் பல்வேறு விவசாய சங்கங்கள் சென்று ஆதரவு தெரிவித்து வரு கின்றன. ஆனால், தேசிய- தென் னிந்திய விவசாயிகள் சங்கத்தினரை மட்டும் டில்லிக்குச் செல்ல காவல் துறையினர் அனுமதி அளிப்ப தில்லை. பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு செய்தபோது, வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று தடுக்கின்றனர். காவல்துறையினர் எங்களைத் தடுக் கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல் துறையினர் அதை மதிப்ப தில்லை.

வேளாண் சட்டங்கள் அமல் படுத்தப்பட்டால் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்ப தால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, டில்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி நவ.26ஆம் தேதி ஓராண்டு நிறை வடைகிறது.

மேலும் உத்தரப் பிரதேசத்தில் திட்டமிட்டு விவசாயிகளை காரால் மோதி கொன்றவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி 13.10.2021 முதல் முதல் நவ.26-ஆம் தேதி வரை 46 நாட்களுக்குத் தொடர் பட்டி னிப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளோம்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment