ஆங் சான் சூகியின் உதவியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

ஆங் சான் சூகியின் உதவியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை

யாங்கூன், அக். 31- மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு போராட் டங்கள் வெடித்தது. மக்கள் போராட்டத்தை ராணுவம் இரும் புக்கரம் கொண்டு அடக்கி வருகி றது. இதில், ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், பலர் மியான் மரை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வரு கின்றனர்.

இதற்கிடையில், ஆங் சாங் சூகியின் கட்சியான ஜனநாயகத்திற் கான தேசிய லீக் கட்சி எம்.பி.க்கள் பலரையும் ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய் யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜனநாயகத் திற்கான தேசிய லீக் கட்சியின் அவைத்தலைவரும், எம்.பியும், ஆங்சாங் சூகியின் நெருங்கிய உத வியாளருமான வின் ஹிடின்(80)-அய் ராணுவத்தினர் கடந்த பிப்ர வரி 1-ம் தேதி கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையில் வின் ஹிடின் தேசதுரோகத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டு தீர்ப்பளித் தது. மேலும், இந்த குற்றத்திற்காக வின் ஹிடினுக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.

இதனை தொடர்ந்து, 80 வயதான வின் ஹிடின் சிறையில் அடைக்கப்பட்டார். ஆங் சான் சூகியின் உதவியாளரான 20 ஆண் டுகள் சிறைதண்டனை விதிக்கப் பட்டுள்ள சம்பவம் கைதாகி சிறை யில் உள்ள பிற தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment