சென்னை, அக்.14- 2020ஆ-ம் ஆண்டில் போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்களில் 99 சதவீதம் பெண் குழந்தைகளுக்கு எதிரானவையாக உள்ளன. இதன் மூலம் சமூகத்தில் அதிகமாக பாதிக்கப்படும் பிரிவில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப் பகம் (என்சிஆர்பி) தெரிவித்து உள்ளது.
உலக
பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட
நேரத்தில் இதுபோன்ற வேதனைக் குரிய தகவல் வெளியாகியுள்ளது.
போக்சோ
சட்டத்தின் கீழ் குற்றம் செய்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண் டனை வரை கிடைக்கும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்த போதிலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற எண்ணிக்கை குறை யும் அளவு குறைவாக இருக்கிறது.
என்சிஆர்பி
புள்ளிவிவரங் களை குழந்தைகள் உரிமை அமைப் பான சிஆர்ஒய் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2020ஆ-ம் ஆண்டில்
போக்சோ சட்டத்தின் கீழ் 28 ஆயிரத்து 327 குற்றங்கள் பதிவாகின. இதில் 28 ஆயிரத்து 50 குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிரானவை என் பது பெண் குழந்தைகளின் பாது காப்பையே கேள்விக்குறியாக்கி யுள்ளது.
இன்னும்
ஆழமாக ஆய்வு செய் தால், 16 வயது முதல் 18 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 14 ஆயிரத்து 92 குற்றங்கள் நடந்துள்ளன. 12 முதல் 16 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக 10 ஆயிரத்து 499 குற்றங் கள் நடந்துள்ளன.
சிறுவர்கள்,
சிறுமிகள் இரு வருமே பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்றாலும், என்சிஆர்பி புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் சிறு வர்களைவிட, பெண் குழந்தை களுக்கான பாதிப்புதான் அதிக மாக இருக்கிறது.
அதாவது,
2020-ஆம் ஆண்டுக்கான போக்சோ சட்டத்தில் பதிவான குற்றங்கள் குறித்து என்சிஆர்பி புள்ளிவிவரங்களில் 99 சதவீதக் குற்றங்கள் பெண் குழந்தைகளுக்கு எதிராகவே நடந்துள்ளன.
இதுகுறித்து
குழந்தைகள் உரிமை அமைப்பான சிஆர்ஒய் அமைப்பின் இயக்குநர் பிரித்தி மஹாரா கூறுகையில், குழந்தை களுக்கான வன்முறையில் அதிக மாக பலியாவது, பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்தான். இதை ஒதுக்கிவைத்துப் பார்க்கக்கூடாது.
கல்வி,
சமூகப் பாதுகாப்பு, ஏழ்மை ஆகியவற்றோடு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சவாலான சூழல் நிலவுகிறது. பெண் குழந்தைகளுக்கு அதிகார மளித்தல் முக்கியப் பங்கு வகிக் கிறது. குறிப்பாக கரோனா காலத் தில் ஏற்பட்ட பாதிப்பும் பெண் குழந்தைகளுக்கான பாதிப்பும் முக்கியமானது.
இந்தச்
சிக்கலான நேரத்தில் பெண் குழந்தைகளுக்கு போது மான கல்வி கிடைக்கவில்லை. வீட் டுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட் டது. குழந்தைத் திருமணத்துக்குள் தள்ளப்பட்டனர். அதுமட்டுமல் லால் இதுபோன்ற பாலியல் வன் முறை, பாலியல் சுரண்டல், துன் புறுத்தலுக்கும் பெண் குழந்தைகள் ஆளாகினர்.
ஆதலால்,
பெண் குழந்தை களுக்கு எதிரான வலுவான பாது காப்பு முறையை உருவாக்குவது அவசியம். கடந்த சில ஆண்டு களாக, பெண் குழந்தைகளுக்கான கல்விச் சூழல், பாதுகாப்பு முறை கள் வலிமை அடைந்து முன்னேற் றம் பெற்று வருகிறது. ஆனால், இவற்றை கரோனா தொற்று பாதித்துவிட்டது.
குறிப்பாக
பெண் குழந்தைகள் படிப்பைப் பாதியிலேயே கைவிடு தல், பாதுகாப்புக் குறைபாடு, பாலி யல் சீண்டல் போன்றவை கரோ னாவுக்குப் பின் அதிகரித்துள்ளன. அதிலும் பதின்வயதில், வயதுவந்த பெண் குழந்தைகள் பல்வேறு வகையான பாதுகாப்புச் சிக்கல் களைச் சந்திக்கிறார்கள்’’.
இவ்வாறு
மஹாரா தெரிவித் தார்.
No comments:
Post a Comment