புதுடில்லி, அக்.13 இரண்டு முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப் பூசியை அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்த நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையரின் (டிசிஜிஅய்) இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
அய்தராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்கு மேற்பட் டோருக்காக உருவாக்கிய கரோனா தடுப்பூசி (கோவாக்சின்) தற் போது பயன்பாட்டில் உள்ளது. இதையடுத்து 2 முதல் 18 வயதுக் குட்பட்டோருக்கான கோவாக்சின் தடுப்பூசியை இந்நிறுவனம் உரு வாக்கியது.
இந்த தடுப்பூசி 20 நாள் கால இடைவெளியில் 2 டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும்.
இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பரி சோதனைகளை கடந்த செப்டம்பர் மாதம் பாரத் பயோ டெக் நிறுவனம் நிறைவு செய்தது.
இதையடுத்து இதன் தரவுகளை ஒன்றிய மருந்துகள் தரக் கட்டுப் பாட்டு நிறுவனத்துக்கு (சிடிஎஸ்சிஓ) இம்மாதம் அனுப்பி வைத்தது.
இந்நிலையில் இதன் நிபுணர் குழு விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த தடுப்பூசியை சில நிபந் தனைகளுக்கு உட்பட்டு அவசர கால பயன்பாட்டின் அடிப்படை யில் பயன்படுத்த ஒப்புதல் அளித் துள்ளது.
இந்த ஒப்புதல் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையரின் ஒப்பு தலுக்காக அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அவர் தனது இறுதி ஒப்புதலை விரைவில் வழங்குவார் எனத் தெரிகிறது.
மேலும் இந்த தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் இம்மாதம் அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
சிறார்களுக்கான கோவாக்சின் தடுப் பூசி ஒப்புதலுக்கு மருத்துவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவர்கள் சங்கத் தலை வர் ஜே.ஏ.ஜெயலால் கூறும் போது, குழந்தைகள் சமூக வாழ்க் கைக்கு திரும்ப இது காலத்தின் தேவை என்றார்.
பாரத் பயோடெக் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் அனுப் பிய பரிசோதனை தரவுகளை சிடிஎஸ்சிஓ மற்றும் அதன் நிபுணர் குழு முழுமையாக ஆராய்ந்து ஆக்கப்பூர்வமான பரிந் துரைகளை வழங்கியுள்ளன.
இது 2 முதல் 18 வயதினருக்கான கரோனா தடுப்பூசிகளுக்கான உலக ளாவிய முதல் ஒப்புதல்களில் ஒன்றாகும்.
விரைவான ஆய்வு செய்ததற்காக நிபுணர் குழுவுக்கு நன்றி. இப்போது நாங்கள் டிசிஜிஅய் இறுதி ஒப்புத லுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment