சுயமரியாதைச் சூரியன் தந்தை பெரியார் பிறந்த நாள் (17.9.2021) தமிழ்நாடெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 17, 2021

சுயமரியாதைச் சூரியன் தந்தை பெரியார் பிறந்த நாள் (17.9.2021) தமிழ்நாடெங்கும் உற்சாகக் கொண்டாட்டம்!

சென்னை, அக்.17 தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் - சமூக நீதி நாள் விழாவாக தமிழ்நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகர்

தந்தை பெரியார் 143ஆவது பிறந்த நாள் விழா சமூக நீதி நாள் விழா வாக மதுரை தல்லாகுளம் பகுதியில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது.  நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்  அவர்கள் மற்றும் மாநகர் மாவட்ட செயலர் பொன்முத்து ராமலிங்கம் , மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன்  மற்றும் பல இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் அங்கே கூடி அய்யா அவர்களுக்கு மரியாதை செய்து மகிழ்ந்தனர். கழகத் தோழர்கள் 60 பேர்  ஒவ்வொரு பகுதியாக சென்று ஆங்காங்கே நம் தோழர்களின் வீடுகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படங்களுக்கு மரியாதை செய்து வந்தனர்..இறுதியாக அவனியாபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை

தஞ்சை சுந்தரம் பெயிண்ட்ஸ்  அருகில் உள்ள விடுதலை சுவையகம்  மற்றும் பிரவுசர் புத்தக உலகத்தில் நடைபெற்ற  அறிவுலக பேராசான் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளை (17.09.2021) முன்னிட்டு தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் தலைமையில்  நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கு.பரசுராமன் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். உடன் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், நீலகிரி ஒன்றிய குழு உறுப்பினர் சகாயகுமார் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் இனிப்புகளை வழங்கி  வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கடவாசல்

மயிலாடுதுறை மாவட்டம் கடவாசல் பொன்னொளி வளாக வாயிலில் தந்தை பெரியாரின் 153ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி உறுதிமொழி ஏற்பு விழா திராவிடர் கழக மாவட்டத் தலைவர் குணசேகரன் மற்றும் கடவாசல் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றதுசீர்காழி சட்டமன்ற உறுப்பினர் மு. பன்னீர்செல்வம் எம்ஏ.பில். தலைமை வகித்தார். திமுக. பொறுப்பாளர் அறிவழகன்மச்சக்காளை, ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பாப்பாத்தி பன்னீர்செல்வம், பண்ணைபாலு, காங்கிரஸ் வட்டாரத்தலைவர் பாலசுப்ரமணியன்பெரியார் உணர்வாளர்கள் பரசுராமன், பெரியார்செல்வம் மற்றும் உள்ளூர் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்

தந்தை பெரியார் குறித்த சிறப்பான உரையினை ஆற்றிய சட்டமன்ற உறுப்பினர் சிலநாட்கட்கு முன் இப்பகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்த பிஜேபி தலைவர் அண்ணாமலை என்ன முயன்றும் இப்பகுதி மக்களின் திராவிட இயக்க உணர்வினை அழிக்க முடியாதென உணர்ச்சி உரையாற்றினார். முடிவில் அனைவரும் சமூகநீதி உறுதிமொழி ஏற்றனர். திக. பொறுப்பாளர் செல்வம் நன்றி கூறினார்.

சோமரசன்பேட்டை பகுதி

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் சோமரசன்பேட்டையில் தந்தை பெரியார்143ஆவது பிறந்த நாளன்று  தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தும், சமூகநீதி நாள் உறுதிமொழியேற்புடன் சிறப்பாக கொண்டாடினர்.  அல்லித்துறை சடைய உபாத்தி யாயர் நினைவுக் கல்வெட்டு கொடிமரத்தில் பா.சேகர் கழக கொடியேற்றினார்.

சோமரசன்பேட்டையில் முத்துசாமி நினைவு கல்வெட்டு கொடிமரத்தில் மொ.பெரியசாமி கழக கொடியேற்றினார். சோமரசன் பேட்டை பி.தியாகராசன் இல்லத்தில் ராஜசேகர் கழக கொடியேற்றினார்.

சோமரசன்பேட்டை ஊராட்சி அலுவ லகம் அருகில் கபிலன் அவர்கள் கழக கொடியேற்றினார். நாடார்சத்திரம் சுந்தரம் நாடார் நினைவு கல்வெட்டு கொடிமரத்தில் பி.தியாகராசன் அவர்கள் கழகக் கொடியேற்றினார். வசந்தநகர் ஆசிரியர் மு.நற்குணம் இல்லத்தில் சா.செபஸ்தியான் கழக கொடியேற்றினார்.

கோனார்சத்திரம் பாம்புகுட்டி நினைவு கல்வெட்டுக் கொடிமரத்தில் சி.திருஞானசம்பந்தம் கழகக் கொடியேற்றினார்.இரட்டைவாய்க்கால், முல்லை நகர் மகாலிங்கம் ராணி இல்லத்தில் சு.மகாமணி கழகக் கொடியேற்றினார்.

இனாம்குளத்தூர் பெரியார் சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். அனைத்து இடங் களிலும் பொதுமக்களுக்கு பிஸ்கட் வழங்கி சமூகநீதி நாள் விழாவாக சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்டோர் : ஆசிரியர் மு.நற்குணம், மண்டல கழக தலைவர். சா.செபஸ்தியான், ஒன்றிய கழக தலைவர். சி.திருஞான சம்பந்தம், ஒன்றிய தி..செயலாளர், பெரியார் பெருந்தொண்டர் பி.தியாகராசன். .அறிவுச்சுடர், சு.ராஜசேகர். சு.மகாமணி. .கபிலன், பா.சேகர், மு.புண்ணியமூர்த்தி, சத்தியமூர்த்தி, .துரைசாமி, ஆசிரியர் இரா.வைரவேல், ஆசிரியர் .சவேரியார், மொ.பெரியசாமி, தி.மு.., முருகன், சி.பி.அய்., முத்தழகு, சி.பி.அய். முருகேசன், தங்கராசு, என்.சந்துரு, விஜயராகவன், பகவதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சிங்கப்பெருமாள் கோவில் 

தாம்பரம் கழக மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் அவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்வில் தி.மு.கழகத்தின் பொறுப்பாளர்கள் ராஜன், கதிரவன் உள்ளிட்ட தோழர்களும், காங்கிரஸ் பொறுப்பாளர் பாலு,  திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்கள் கருணாகரன், நரசிம்மன், முருகன், திருக்குறள் வெங்கடேசன், காஞ்சிபுரம் அருண்குமார் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை பாராட்டி  அனைத்துக் கட்சி சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தேனி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாளை கொண்டாடும் முகமாக பெரியார் சமூகநீதிக்கான கேக்கை வெட்டி இனிப்பு வழங்கினார்கள் தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதிமொழியை அவர் வாசிக்க தோழர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்அவருக்கு தேனி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ரகுநாகநாதன் சால்வை அணிவித்து சிறப்பித்தார்கள். உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்,  தேனி திமுக ஒன்றிய செயலாளர் சபாபதி, திமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் முன்னாள் நகர செயலாளர் ராஜா ரமேஷ், நகர மன்ற முன்னாள் துணைத் தலைவர் சங்கர் , போடி ஒன்றிய ஊராட்சி செயலாளர் செல்வம் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள்  மற்றும் திராவிட முன்னேற்றக் கழக அனைத்து பிரிவைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டார்கள்.  தேனி மாவட்ட சி.பி.எம். கட்சியின் மாவட்ட செயலாளர் மரியாதைக்குரிய ராஜப்பன் தாலுகா செயலாளர் எஸ்.கே.பாண்டியன் நகர செயலாளர் செல்வம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். மக்கள் நீதி மய்யகட்சி  நகர செயலாளர் மற்றும் தோழர்கள் வருகை தந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள். 

மாவட்ட பெரியாரிய அம்பேத்காரிய கூட்டமைப்பு இயக்கத்தின் தோழர்கள்  மாலை அணிவித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்கள். தந்தை பெரியார் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற நூலை பொது மக்களுக்கு விநியோகித்தனர்.  இந்திய காங்கிரஸ் கட்சி யின் நகர தலைவர்  முசாக் மந்திரி மற்றும் போடி நகர காங்கிரஸ் தொண்டர்கள்  மாலை அணிவித்து சிறப்பித்தார்கள். வந்திருந்த அனைவருக்கும் தேநீர் கொடுத்தும் இயக்க புத்தகங்கள் வழங்கியும் சால்வையணிவித்து மாவட்டத் தலைவர் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டது.

வாடிப்பட்டி 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தி.., தி.மு.., விடுதலை சிறுத்தைகள்  கட்சிகளின் சார்பாக தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. தி.மு..சார்பாக வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் தலைமை தாங்கி இனிப்பு வழங்கி உறுதிமொழி ஏற்றார். ஓன்றியசெயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள்பேரூர்செயலாளர் பால்பாண்டியன், முன்னாள்மாவட்டதுணைத்தலைவர் அயூப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரவன் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் அய்யாவு, வழக்குரைஞர்கள் ராஜாஜி, கார்த்திக், மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராகுல் சர்வேஷ் நன்றி கூறினார். 

வாடிப்பட்டி கால்நடைமருத்துவமனை முன்பு தந்தை பெரியார் வளாகம் மற்றும் குட்லாடம்பட்டி பெரியார்நினைவு சமத்துவபுரத்தில் திராவிடர் கழகம் சார்பாக நடந்த விழாவிற்கு மாவட்டதலைவர் சு.தனபாலன் தலைமை தாங்கி பெரியார்சிலைக்கு மாலை அணிவித்து  ஏழை, எளியோருக்கு மதியஉணவு வழங்கினார். மாவட்ட செயலாளர் எரிமலை கொடியேற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் பொன்கலைதாசன், .காங்கிரஸ் நகரத் தலைவர் முருகானந்தம் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி தலைவர் முத்துகருப்பன் வரவேற்றார்.  மண்டல தலைவர் சிவகுருநாதன், சமூகநீதி உறுதிமொழி வாசித்தார். இதில் நிர்வாகிகள் அச்சுதன், கலைஞர்தாசன், குப்புசாமி, வழக்குரைஞர்கள் மகேஷ்குரு, சந்திரமோகன் உள்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில் நெல்சன் நன்றி கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக பேரூர் செயலாளர் அரசுவிஜயார் தலைமை தாங்கினார். வாடிப்பட்டிவளவன் முன்னிலை வகித்தார். யுவராஜா வரவேற்றார். இதில் நிர்வாகிகள் பாலன், ஆனந்த், ராஜகோபால், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தீபக் நன்றி கூறினார்.

வாடிப்பட்டி  அரசு அலுவலகங்களில் உறுதிமொழி

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் செப்டர்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடவேண்டும் என்றும் அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் சமூகநீதி உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.அதன்படி வாடிப்பட்டி பகுதியில் உள்ள அரசு அலுவ லகங்களில் சமூகநீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ராம்கணேஷ் தலைமையில் வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்களும், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர்(..) ரத்தினகலாவதி தலைமையில் ஒன்றிய ஆணையர் (கி..) பாண்டியன் உறுதிமொழி வாசித்தார். இதில் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் எம்.ஆர்.சரஸ்வதி உறுதிமொழி வாசித்தார்.

அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியா ளர்கள் கலந்து கொண்டனர். மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளர் சாமுண்டீஸ்வரி தலைமையில் உதவிபொறியாளர் கீர்த்திகா முன்னிலையில் மின்வாரியபணியாளர்கள் உறுதிமொழி

ஏற்றனர். அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி தலைமையில் மருத்துவர் தனசேகரன் முன்னிலையில் தலைமைசெவிலியர்(பொறுப்பு)கவிதா உறுதிமொழிவாசித்தார்.

மருத்துவர்கள் நிர்மலன், சுபா, ஆனந்த் உள்பட மருத்துவமணை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை புறநகர் மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருமங்கலம் நகர் தந்தை பெரியார் சிலைக்கு 143ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது.

புறநகர் மாவட்ட செயலாளர் . . எரிமலை, புறநகர் மாவட்ட  இளைஞரணி தலைவர் பா. முத்துக்கருப்பன், மாணவர் கழகம் பா. கருப்பசாமி, ஒன்றிய செயலாளர் .சக்திவேல், மற்றும் திமுக, அதிமுக, மதிமுக, விசிக, .கம்யூனிஸ்ட், அமமுக, ஆதி தமிழர் பேரவை போன்ற அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் பங்கேற்று உறுதி மொழி ஏற்று விழாவினை சிறப்பித்தனர்.

தருமபுரி மாவட்ட இளைஞரணி சார்பில் குருதிக்கொடை

தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் குருதிக்கொடை வழங்கும் திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்ட இளைஞரணி தலைவர்

தீ. ஏங்கல்ஸ் தர்மபுரி மாவட்ட மாணவர் கழக செயலாளர் பூபதி ராஜா, கழகத்தின் ஆதரவாளர் முனியப்பன் ஆகியோர் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குருதிக்கொடை அளித்தனர்.

அவர்களுக்கு தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்

பட்டது.

கிருட்டினகிரி

 கிருட்டினகிரி மாவட்டம் மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி தாளாளர்  முனைவர் மு.இராஜேந்திரன் தலைமையில் ஆசிரியர்கள் பங்கேற்புடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கோவை - 'விடுதலைமலர் வழங்கல்

கோவை பொள்ளாச்சி அய்டிஎம் நிறுவன தலைவர் எஸ்.சரவணன் அவர்களை கோவை பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் .மு.ராஜா சந்தித்து தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரை வழங்கினார். அய்டிஎம் நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவியர்களிடம் தந்தை பெரியாரை பற்றியும், அய்யா வின் பெண்ணுரிமை சிந்தனைகளை பற்றியும் பெருமிதத்துடன் எடுத்து கூறி, கல்வியும் பகுத்தறிவுமே பெண்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும். தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகளை பகுத்தறிவு புத்தகங்களை அவசியம் வாங்கி படிக்க வேண்டும் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியபோது பயிற்சி பெறும் மாணவியர்கள் அனைவரும்  உற்சாகத்துடன் கைதட்டி வரவேற்றனர்.

சென்னை - அய்ஸ்அவுஸ் பகுதி

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் கோவீ.ராகவன் முன்னிலையில் திருவல்லிக் கேணி, அய்ஸ்அவுஸ் பகுதி பெசன்ட் சாலையில் தந்தை பெரியார் படம் வைத்து கேசரி, ஜாங்கிரி போன்ற இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூர் நொச்சி நகர்

17.9.2021 அன்று மாலை 5 மணிக்கு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா  மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில்  பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலை மையில் ஜாங்கிரி இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மந்தைவெளி

17.9.2021 மாலை 5.30 மணிக்கு தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மந்தைவெளி, வன்னியம்பதி குடியிருப்புப் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இளைஞரணி சார்பில் .குமார் தலைமையில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் .மகேந்திரன் ஆகியோர் முன்னி லையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உடன் கல்வி வள்ளல் காம ராசர், அறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சூளைமேடு

17.9.2021 அன்று  சூளைமேடு ஆத்ரேயா புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தந்தை பெரியாரின் படத்தை வைத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பிறந்தநாளைக் கொண்டாடினர்.

போடிபட்டி

தாராபுரம் கழக மாவட்டம் உடுமலை ஒன்றியம் போடிபட்டியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாள் விழா கழக கொடியேற்றி  இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப் பட்டது

பழனி

17.9.2021 அன்று பழனியில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 143 வது பிறந்தநாள் விழா - சமூக நீதி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பொ.பெ.இரணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மா முருகன், . மாவட்டத் தலைவர் . திராவிட செல்வன், பழனி நகர தலைவர் சோ.சோசப், பழனி நகர செயலாளர் சி. ராதாகிருஷ்ணன்

காரைக்குடி

காரைக்குடி மாவட்ட கழக அலுவலகத்தில் கழகக் கொடியை  மாணவர் கழகத் தோழர் பிரவீன் ஏற்றி வைத்தார். உடன் மாவட்ட தலைவர் அரங்கசாமி,  துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், வாரியவயல் ஜோசப் , மாவட்ட செயலாளர் வைகறை ஆகியோர் கலந்து கொண்டனர்.

காரைக்குடி செஞ்சை பகுதியில் மாவட்ட துணை செயலாளர் ..பழனிவேலு ஏற்பாட்டில் கழக கொடியேற்றப்பட்டது.

தேவகோட்டை ஒன்றிய செயலாளர் தோழர் ஜோசப் பெரியார் பிறந்த நாள் விழாவை வாரியன் வயல் கிராமத்தில் கொண்டாடினார். காரைக்குடி கழக மாவட்டம்   பலவான்குடியில், கல்லல் ஒன்றிய தலைவர் சுப்பையா ஏற்பாட்டில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்

பட்டது.

 கழகக்கொடியை மாவட்ட செயலாளர் வைகறை ஏற்றிவைத்து  சமூக நீதி நாள்  உறுதி மொழி எடுக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட தலைவர் அரங்கசாமி, எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் குமரன் தாஸ், நகர தலைவர் ஜெகதீசன், பலவாங்குடி கழகத் தோழர்கள் சண்முகசுந்தரம், பாண்டி முருகன் ராஜா, ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆகக் கொண்டாடுவது , ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ஆம் நாளன்று தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும்  சமூகநீதி  நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும் என்ற  தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் தொடங்கும் முன்பாக சமூக நீதி நாள் உறுதிமொழி  நிதி  மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர். 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவுட் போஸ்ட் பகுதியில் தந்தை பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மதுரை - கரிசல்பட்டி

 மதுரை மாவட்டம் திருமங்கலம் கரிசல்பட்டி கிராமத்தில் அய்யா பிறந்த நாள் விழா சமூகநீதி நாளாக ஊராட்சி மன்றத்தில் கொண்டாட பட்டது.

திருமங்கலம் ஒன்றிய தலைவர் மு.சுந்தரராசன் தலைமையில், கரிசல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் குருவம்மாள்சின்னவெள்ளை, ஊராட்சி உறுப்பினர் ரா. குருசாமி ஆகியோர் பகுத்தறிவு பகலவன் அய்யா அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கரிசல்பட்டி ஊராட்சியில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்கபட்டது.

 நிகழ்வில் திராவிடர் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மு. சண்முகசுந்தரம், முத்து கருப்பன், மற்றும் கரிசல்பட்டி கிராம கழகத்தின் தோழர்கள் மு.சு.அன்பு மணி, மு.சு.வீரமணி, மு.சு.வைரமணி, .தி.மு. விவசாய அணி செயலர் சக்திவேல், கழகத்தோழர் சத்திய மூர்த்தி ஆகியோர் பங்கேற்று  பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

திருமங்கலம் ஒன்றிய தலைவர் மு. சுந்தர ராசன் நன்றி நவில சமூகநீதி நாள் அய்யா பிறந்த நாள் விழா இனிதே நிறைவுற்றது.

 

 

 

No comments:

Post a Comment