சென்னை, அக். 1- தமிழ்நாட்டில் நேற்று (30.9.2021) ஒரே நாளில் ஆயிரத்து 612 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில், கரோனா தொற்றுக்கு இதுவரை 26 லட்சத்து 63 ஆயிரத்து 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 578 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 626 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 26 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் கரோனா தினசரி பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 183 பேருக்கும், கோவையில் 176 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 150 ஆக உள்ளது.
No comments:
Post a Comment