அக்டோபர் 15 - உலக மாணவர்கள் தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

அக்டோபர் 15 - உலக மாணவர்கள் தினம்

அக்டோபர் 15, 1931 அன்று பிறந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர். .பி.ஜே. அப்துல் கலாமின் நினை வாக ஒவ்வொரு ஆண்டும் உலக மாணவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் மாணவர்களுக்காக அப்துல் கலாம் செய்த சேவைகள் மற்றும் முயற்சி களை அங்கீகரிக்கும்  நோக்கத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அய்க்கிய நாடுகள் சபை 2010இல் அக்டோபர் 15அய் உலக மாணவர் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை கொண்டாடும் வகையில் உலக அமைப்பு ஒரு கருப்பொருளை முடிவு செய்கிறது. இந்த ஆண்டு, உலக மாண வர்கள் தினத்தின் கருப்பொருள் "மக்கள், கிரகம், செழிப்பு மற்றும் அமைதிக்காக கற்றல்" ஆகும்.

தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், தனது வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிப்புடன் மாணவர்கள் மத்தியில் விரிவுரையாற்றினார். ஏவுகணைகள் மற் றும் நாட்டின் விண்வெளித் திட்டங்களின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்காற்றிய அவர் 'இந்தியாவின் ஏவுகணை மனிதன்' என்று அழைக்கப்படுகிறார்.

அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய வற்றில் பதவி வகித்துள்ளார். 2002 ஆம் ஆண்டில், கலாம் இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவரானார். 2007 வரை குடியரசுத் தலைவராக பணியாற்றிய அவர் அதன் பிறகு கற்பிப்பதற்காக தனது வாழ்க் கையை அர்ப்பணித்தார்.

அப்துல் கலாமுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்திய அரசின் அறிவி யல் ஆலோசகராக பணியாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

கலாம் ஜூலை 27, 2015 அன்று அய்அய்எம், சில்லாங்கில் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது மார டைப்பால் சரிந்து விழுந்து இறந்தார். அவர் மறைந்து பல வருடங்கள் ஆகியும், நாட் டின் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அவரது பங்களிப்புகள் இன்றும் நினைவில் உள்ளன.

No comments:

Post a Comment