கனமழையால் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

கனமழையால் 150 குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு மாற்றம்

அய்தராபாத், அக்.10 அய்தரா பாத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தாழ்வான பகுதி களில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண முகாமுக்கு மாற்றப் பட்டது.

அய்தராபாத்தின் ஹயாத் நகரில் உள்ள குடியிருப்பு காலனி களில் நேற்று (9.10.2021) பலத்த மழை பெய்தது. இதனால் அங் குள்ள குடியிருப்பு காலனிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மேலும் பல வீடுகளிலுள்ள பொருட்களை வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மழை  பெய்ததால் நகரின் சில பகுதிகளில் உள்ள சாலைகளில் முழங்கால் வரை தண்ணீர் தேங் கியது. இத னால் அங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 150 குடும்பங்கள் நிவாரண  முகாமிற்கு மாற்றப் பட்டது. அவர்களுக்கு தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் பாட் டில்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் சாரூர் நகரில் உள்ள லிங்கோஜிகுடா பகுதி யில்  131.5 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் செகந்திராபாத்தின் நகர்புற பகுதியில் 95.3 மிமீ மழையும்,  பாட்டிகட்டா வில் 69.3 மிமீ மழையும் பெய்துள்ளது. 

அய்தராபாத் மாநக ராட்சி மேயர் கத்வால் விஜய லக்ஷ்மி மற்றும் எல்.பி. நகர் எம்.எல். டி.சுதீர் ரெட்டி ஆகி யோர் மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். 

மேலும்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மேயர், மழையால் எந்த உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் வலியு றுத்தினார்.

மாநிலத்தில் மேலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment