15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களை அழித்தால் ஊக்கத் தொகை: ஒன்றிய அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களை அழித்தால் ஊக்கத் தொகை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடில்லி, அக். 9- தனி நபர்கள் பயன்படுத்தி வரும் 15 ஆண்டுகள் பழைய வாக னங்களை அழிக்கும் போது அவர்களுக்கு 25 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசு படிப் படியாக இந்தியாவில் பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர் பான புதிய விதிகள் தற் போது அறிமுகம் செய் யப்பட்டுள்ளன.

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங் களின் பதிவை புதுப்பிக்க வழக்கமான கட்ட ணத்தை விட 8 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலாகும் இந்த புதிய விதிமுறை என ஒன் றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இவ்வாறு வாகனங்களை அழிக்கும் போது ஏற்படும் இழப்புக் காக ஊக்கத் தொகை வழங்கப்படும் என ஒன் றிய அரசு அறிவித்துள்ளது.

அதிகபட்ச பராம ரிப்பு மற்றும் எரிபொருள் செலவைக் கொண்டுள்ள பழைய, மாசுபடுத்தும் வாகனங்களை அழிப்ப தற்கு வாகன உரிமையா ளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வாகன அழிப்புக் கொள்கை முன்வந்துள்ளது.

இதன்படி 2022 ஏப் ரல் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருக்கும் இந்த சலுகைத் திட்டத் திற்கு இந்திய அரசிதழில் 05.10.2021 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் அறிவிக்கையை 720() சாலை போக்குவ ரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தனி நபர் பயன்பாட்டு வாகனங்களாக இருப் பின் 25 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப் படும். வணிகரீதியான போக் குவரத்து வாகனங் களாக இருப்பின் 15 சதவீதம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இந்தச் சலுகை போக் குவரத்து வாகனங்களாக இருந்தால் எட்டு ஆண்டு கள் வரையும், தனி நபர் பயன்பாட்டு வாகனங் களாக இருந்தால் 15 ஆண்டுகள் வரையும் கிடைக்கும்.

No comments:

Post a Comment