நாகர்கோவில், அக். 10- 17.9.2021 அன்று காலை 9.30 மணிக்கு நாகர்கோவி லில் உள்ள பெரியார் சிலைக்கு, மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிர மணியம் தலைமையில் மாலை அணிவிக் கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந் தன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், துணைச் செயலாளர் சோ.பன்னீர்செல்வம், அமைப் பாளர் ஞா.பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் மா.மணி, இளைஞரணிப் பொறுப்பா ளர்கள் இ.ராஜேஷ், மு.சேகர், மகேஷ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, பகுத்தறிவு இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், தொழிலாளரணி செயலாளர் ச.ச.கருணாநிதி, நகர அமைப் பாளர் சு.இராஜகோபால், தோழர் கள் ம.செல்வராசு, பால கிருட்டிணன், குமரிச்செல்வன், முத்து பைரவன், ச,ச,மணி மேகலை, சியாமளா, ப.முருகபதி மற்றும் இளைஞரணித் தோழர் கள் சந்தோஷ், ம.தமிழ்மதி, இபி, எல்.பி.ஆறுமுகம், கோகுல், தமி ழரசி, அம்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இனிப்பு வழங்கல்
அங்கு மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு - காரங்கள் பெரியார் நூல்கள் அடங்கிய பையுடன் வழங்கப் பட்டன. பெரியாரியப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங் கப்பட்டன. கழகக் கொடி ஏற் றப்பட்டது.
அனைத்துக் கட்சியினர் கொண்டாட்டம்
தந்தை பெரியார் சிலைக்கு, மாவட்ட திமுக செயலாளர் என்.சுரேஷ்ராஜன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றி வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திரு மாவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலா ளர் செல்லசாமி, கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர். அக்கட்சிகளின் தோழர்கள் பெருமளவில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திராவிடத் தமிழர் கட்சி சார் பில் அன்பரசன், அ.ம.மு.க. உள் ளிட்ட கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் சிறப்பாக நடத்தப்பட்டன.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் மய்யம்
செண்பகராமன் புதூர், இலட்சுமிபுரம் சமத்துவ புரங் களில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு வெள்ளமடம், ஆரல்வாய்மொழி பகுதிகளில் கழகக் கொடிகளைப் பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்த னர். ‘பெண் ஏன் அடிமையா னாள்?’ மற்றும் இயக்க நூல்கள் பொதுமக்களிடம் பரப்புதல் செய்யப்பட்டன.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடி கள் நடப்பட்டு பெரியார் மய்யம் மின்விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டிருந்தது. முன்பாக கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் பெரியார் மய்யம் வந்து தோழர்களை சந்தித்துக் கலந்து றைவாடினார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விளம்பர சுவரொட்டிகள்
தந்தை பெரியார் பிறந்த நாள் விளம்பர சுவரொட்டிகள் - பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு நன்றி தெரிவிக்கும் சுவ ரொட்டிகள் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் உள்பட பல ஊர்களிலும் சிறப்பான முறை யில் ஒட்டப்பட்டிருந்தன. முத லமைச்சருக்கு நன்றி தெரிவித்து உரிய அனுமதி பெற்று, டிஜிட் டல் பதாகைகளும் வைக்கப் பட்டிருந்தன.
அறிஞர் அண்ணா பிறந்த நாள்
15.9.2021 அன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் குமரி மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோயில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து - மரியாதை செய்யப்பட்டு இனிப்புகள் வழங் கப்பட்டன.
No comments:
Post a Comment