திராவிடப் பெருவிழாவாக திருப்பத்தூர் மாவட்டமே திருவிழாக்கோலம் பூண்டது!
திருப்பத்தூர், அக்.1 திருப்பத்தூர் நகரில் மட்டும் 52 இடங்களில் மகளிரணியினர் மாலை அணிவிப்பு! கிளைக் கழகங்கள், கிராமங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்கள்! சோலையார் பேட்டையில் பதினேழு - ஆம்பூரில் ஏழு மற்றும் வாணியம்பாடி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பு! ஏல மலையில் உள்ள உலகிலேயே உயரமான இடத்தில் அமையப் பெற்ற பெரியார் சிலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்பது பெரியார்சிலை களுக்கு மாலை அணிவிப்பு! கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கல், மரக்கன்றுகள் நடுதல்! திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத் தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், தமுமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பு! உறுதிமொழி ஏற்பு! கழகத் தோழர் களின் இல்லங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு! பேச்சு, பாடல், கவிதை போட்டிகள் நடத்தி பரிசளிப்பு! பல்வேறு நலத்திட்டங்கள்!
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா என்றால் எப்போதுமே காலை முதலே களைகட்டும் திருப்பத்தூர் மாவட்டம், "சமூக நீதி நாள்" என்ற முதலமைச்சரின் அறிவிப் பால் கூடுதல் உற்சாகம் பெற்று பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளையொட்டி 143 இடங்களில் விழா ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு இறுதியில் ஓர் அறிவுத் திருவிழாவாக 150 க்கும் மேற்பட்ட இடங்களில் பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து எழுச்சியுடன் நடைபெற்றது.
நகரின் முக்கிய பெருமக்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கழகத் தோழர்கள் என பல தரப்பினரும் "பெரியார் எல்லோருக்கும் உரியார்" என்ற உணர்வில் கூடி மகிழ்ந்து கொண்டாடினர்!
மாவட்டத் தலைவர் இல்லத்தில் தொடக்கம்
திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் அவர்களின் இல்லத்தில் அதிகாலை 6 மணிக்கே கழகத் தோழர்கள் ஒன்றுகூடினர். காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை நிறு வனத் தலைவர் கணேஷ்மல், திமுக மாவட்ட முன்னாள் பொருளாளர் அண்ணா அருணகிரி, கழக மாநில பொருளாளர் எ.அகிலா, வழக்குரை ஞர் அசோகன், முன்னாள் டெப்டி கலெக்டர் குமரவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எம்.என்.அன்பழகன், பெரியார் பெருந் தொண்டர்கள் ரொட்டேரியன் புரட்சி, பெருமாள் சாமி, காவல் துறை ஆய்வாளர் தண்டபாணி, கழக மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன், மாவட்டச் செய லாளர் வி.ஜி.இளங்கோ, மாவட்ட துணைத் தலைவர் எம். கே. எஸ் இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் கலைவாணன், பெரியார் பெருந் தொண்டர் கே. கே. சி.கமலம்மாள், மருத்துவர் மங்கையர்க்கரசி, மகளிரணி மண்டல செயலாளர் மு. இந்திராகாந்தி, மாவட்ட மகளிரணித் தலைவர் ம.கவிதா, மகளிரணி கற்பகவள்ளி, ஜான்சி, கவிஞர் சுப்புலட்சுமி, சபரிதா, முகிலா, விஜயா,சுதா, முருகம்மாள், பூவிழி, ஓவியா, கவி நிலா,கீதா, சுகந்தி,சித்ரா, உமா, மகேஸ்வரி, பூங்கோதை, மாவட்ட இளைஞரணி செயலாளர் பழனிச்சாமி, பொறுப்பாளர் ஜிம் சுரேஷ், நகர இளைஞரணி பொறுப்பாளர் பாலாஜி, நகர ப.க. தலைவர் அக்ரி அரவிந்த், கழகத் தோழர்கள் ஏ.டி.ஜி.இந்திரஜித், ஏ.டி.ஜி.சித்தார்த்தன், ஏ.டி.ஜி. கவுதமன், நகர இளை ஞரணி செயலாளர் பெரியார் செல்வன்,கட்டேரி கழக தலைவர் பாண்டியன், அச்சமங்கலம் கழக பொறுப்பாளர் அன்பழகன்,சென்னப்பன், சகாய ராஜ், முருகன், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் திருப் பதி, முத்துச்செல்வன்,நிலவன், அகரன், சுபாஷ் உள்ளிட்ட அனைவரையும் உற்சாகமாக வரவேற்று வாழ்த்துகளை பகிர்ந்து பெரியார் பிறந்தநாள் விழாவின் அவசியத்தையும் சமூகநீதி நாள் என்பதின் பொருளையும் சிறப்பாக சொல்லி தொடங்கி வைத்தார் மாவட்டத் தலைவர். அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். மகளிரணி செயலாளர் வெண்ணிலா கொடியேற்றி னார். தந்தை பெரியார் படத்திற்கு கணேஷ்மல் அவர்கள் மாலை அணிவித்தார். அடுத்ததாக மாவட்டச் செயலாளர் விஜி, இளங்கோ - கவிதா இல்லத்தில் மாவட்டத் தலைவர் கொடி யேற்றினார்.
அங்கிருந்து இரண்டு குழுக்களாக பிரிந்து அடுத்தடுத்த இடங்களுக்கு தோழர்கள் பட்டாளம் மாவட்டம் முழுவதும் விரைந்தது.
நகரில் மய்யமிட்ட மகளிரணி!
கழகக் கொடி கட்டப்பட்ட ஆறு ஆட்டோக் களில் மகளிர் அணியினர் பொருளாளர் எ.அகிலா அவர்கள் தலைமையில் நகரின் கீழ்க்கண்ட பல்வேறு இடங்களில் மாலை அணிவித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர் எம். கே. எஸ். இளங்கோவன்- வெண்ணிலா, நகர மகளிரணி தலைவர் தாமரை, அமைப்பாளர் விஜயா, பெரியார் செல்வன் ஆகியோர் இல்லங்கள், சங்கர் ஆசிரியரின் அருண் பேப்பர் மார்ட், ஆல்ட்ரின் துணிக்கடை, மலர்கந்தசாமி, மாவட்ட அமைப் பாளர் மா.சி. பாலன், என்.ஜி.ஓ நகர் முன்னாள் தாசில்தார் குமரவேல், நகர தலைவர் காளிதாஸ், ரொட்டேரியன் புரட்சி ஆகியோரின் இல்லங்கள், கலைச்செல்வன் இல்லம் மற்றும் கடை, கே.எம்.டி. சுபாஷின் விஜயா சாக்பீஸ் சென்டர், மாவட்ட செயலாளரின் பூக்கடை, சுரேஷின் அர்னால்டு ஜிம், பாரம்பரிய கொள்கை உணர்வாளர் ஞானதீபம் இல்லம், திமுகவை சேர்ந்த முன்னாள் திருப்பத் தூர் வர்த்தக சங்கத்தலைவர் என். எஸ். இளங் கோ இல்லம், ஏ.டி.ஜி இந்திரஜித் பாத்திரக்கடை, அவரது இணையர் லட்சுமி பாத்திரக்கடை, டாக்டர் வினோதினியின் கண் மருத்துவமனை, ம.தி.மு.கவை சேர்ந்த இளங்கோ வின் நிறுவனம், டி.வி. அன்பழகனின் உணவகம், ஜவகர் இரும்பு கடை, தனசேகர் அவர்களின் வேலூர் ஃபோட்டோ பாஸ்ட், மாணவர் நகலகம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கழக மகளிரணியினர் தந்தை பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்து பிறவி பேதம், பாலின பேதம் ஒழித்த பெரியாரை பெண்கள் சேர்ந்து வாழ்த்தி மகிழ்ந்து, முழங்கி கொண்டாடினர்.
மாவட்டம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை
உலகிலேயே கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் இருக்கும் சிறப்பு பெற்ற பெரியார் சிலை ஏல மலையில் உள்ளது. அங்கு முனிரத்தினம் தலைமையில் மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் உட்பட தோழர்கள் மாலை அணிவித்து கொண் டாடினர்.
ஆசிரியர் நகரிலுள்ள பெரியார்சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் மாசி பாலன் அவர்கள் மாலை அணிவித்தார். திருப்பத்தூர் வி.பி.சிங் மண்டபம் எதிரில் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா சரவணன் அவர் களும் அண்ணா சிலைக்கு எம்.என். அன்பழகன் அவர்களும் மாலை அணிவித் தார்கள்.
அனைத்துக் கட்சித் தோழர்கள் திருப்பத்தூர் பெரியார் சிலைக்கு முன் உறுதிமொழி ஏற்பு!
வி.பி சிங் அவர்களால் திருப்பத்தூர் வட் டாட்சியர் அலுவலகம் எதிரில் திறக்கப்பட்ட பெரியார் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி அவர்கள் மாலை அணிவித்தார். கூட்டணிக் கட்சியினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் காலை 9.30 மணி அளவில் திரண்டனர். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கே.சி .எழிலரசன் அவர்கள் தலைமை ஏற்று இன்றைய திமுக அரசின் சமூகநீதி சாதனைகளை பட்டியலிட்டு எடுத்துக்காட்டி எழுச்சி உரை ஆற்றினார்.
தொடர்ந்து மாவட்ட துணைத்தலைவர் எம்.கே.எஸ். இளங்கோவன் முதலமைச்சர் வடித்துத் தந்த உறுதிமொழியை கூற அனைவரும் உரக்கக் கூறி உறுதியேற்றனர்.
இந்த நிகழ்வில் திமுகவை சேர்ந்த மாவட்ட பொருளாளர் ரகுநாத், மாவட்டத் துணை செயலாளர் கே. பி.கே. ஜோதிராஜன், முன்னாள் நகர்மன்ற தலைவர் அரசு, முன்னாள் மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி மற்றும் பல முக்கிய பொறுப்பாளர்களும் மாலை அணிவித்த னர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி பொறுப்பாளர்கள்,
காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கணேஷ்மல் ரொட்டே ரியன் புரட்சி, பரந்தாமன், பெருமாள் சாமி, முன்னாள் டெப்டி கலெக்டர் குமரவேல், தொழிலதிபர்கள் மதியழகன், மதிமுகவை சேர்ந்த நகரச் செயலாளர் இளங்கோ, நகர அமைப்பாளர் சரவணன் உள்ளிட்ட தோழர்கள் உடன் இருந்தனர்.விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சுபாஷ் மாலை அணிவித்தார். அவர் தலைமையில் கூடியிருந்த அய்ம்பதிற்கும் மேற்பட்ட விசிக தோழர்கள், மற்றும் திராவிடர் கழக மகளிரணி, இளைஞரணி தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இணைந்திருந்து தந்தை பெரியார் வாழ்க என்று முழக்கமிட்டு உறுதிமொழி ஏற்றது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. முதல்வரின் சமூகநீதி சாதனைகள் அடங்கிய பதாகை அங்கே வைக்கப்பட்டிருந்தது.
பெரியார் நினைவு சமத்துவபுரங்களில்...
சந்திராபுரம் பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக கந்திலி ஒன்றிய சேர்மன் இராஜமாணிக்கம் அவர்களும், வெங்களாபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு அண்ணா அருணகிரி அவர்களும், உடையாமுத்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார்சிலைக்கு திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குலோத்துங்கன் அவர்களும் மாலை அணிவித்தார்கள்.
தோக்கியம்
பெரியார்சிலைக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தசீலன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் சிறுவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் குழுமி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சந்தோஷ், இளையராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
சோலையார்பேட்டை
சோலையார் பேட்டையில் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச் செல்வன் தலைமையில் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் அவர்கள் மாலை அணிவித்தார். உடன் மாவட்ட பொறுப் பாளர்கள் ம.முத்தமிழ்ச்செல்வி, நகர பொறுப்பாளர் ம.அன்பழகன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன், செயலாளர் வி.ஜி. இளங்கோ, மதிமுக மாவட்டச் செயலாளர் வ. கண்ணதாசன், காங்கிரஸ் பிரமுகர் ஏலகிரி வி.செல்வம், மற்றும் சி. கவிதாதண்டபாணி, சிந்துஜா, மு. க. அருள்நிதி, கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், வி.சி.க பொறுப் பாளர் சிவா, ரயில்வே தொழிற்சங்கம் எஸ்சி எஸ்டி பொறுப்பாளர் பீமன், திமுக நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கூடி இருந்து வாழ்த்துகளை முழங்கி சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் நகர கழக தலைவர் அன்புச் சேரன், செயலாளர் காசி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஓய்வூதியர் சங்க செயலாளர் கார்மேகம் மற்றும் பங்கேற்ற மாணவர்கள் பெரியாரின் தொண்டி னைப் பாராட்டிப் பேசினார்கள். மாணவர் களுக்கு இனிப்பும் எழுது பொருட்களும் வழங்கப்பட்டது.
ஆம்பூர்
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் விசிக மாவட்டத் தலைவர் என். சந்திரன் மற்றும் ரா.சக்தி நகர தலைவர், யுவராஜ் மாவட்ட பொறுப்பாளர் உட்பட இளைஞர்கள் பொதுமக்கள் ஒன்றுகூடி மாலை அணிவித்தனர். சோமலாபுரத்தில் கழகப் பொறுப்பாளர் வெற்றிகொண்டான் மற்றும் திமுக பொறுப்பாளர் சந்திரவாணன், அன்பு, சேகர் ரகுபதி, சூர்யா, பெரியார் பிஞ்சுகள் ஏகிஸ்வரன், முத்தழகன், பூவழகன் ஆகியோர் இணைந்தும், சான்றோர் குப்பத்தில் திமுக ஜீவா, அன்பு, Ex.mc சார்லி மற்றும் திமுக தொண்டர்கள், நகர கழக தலைவர் ரவி ஆகியோர் பன்னீர்செல்வம் தலைமையில் ஊர் பொது மக்களோடு இணைந்து மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள்
நாட்றம்பள்ளி கலைமகள் கல்லூரியில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றனர், இனிப்புகள் வழங்கப்பட்டது.
சுந்தரம்பள்ளியில் கோ.சங்கர் மற்றும் கோ.திருப்பதி ஆகியோர் தலைமையிலும், அம் பேத்கர் நகரில் பாரதிதாசன், காங்கங்கரையில் சி. சந்தோஷ் குமார், கண்ணாலப்பட்டியில் தசரதன், புள்ளா நேரியில் அன்பழகன் ஆகியோர் தலைமையிலும் நத்தத்தில் திமுக அன்பு தலைமையிலும் மாலை அணிவிக்கப் பட்டது. அன்பழகன், தமிழ்ச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர். கந்திலி ஒன்றிய தலைவர் கனகராஜ் தலைமையில் பெரியகரம் கூட்டுரோடு பகுதி யிலும், பெரியார் வணிக வளாகத்திலும் கொடி யேற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
சிவராஜ் பேட்டை
சிவராஜ் பேட்டையில் ஜிம். சுரேஷ் ஏற்பாட்டில் கவுதமன் தலைமையில் பெரும் நிகழ்ச்சியாக நடைபெற்றது. துடிப்புமிக்க இளைஞர்கள் கூடியிருந்தனர்.
பொம்மிக்குப்பம்
பொம்மிக்குப்பம் ஊர் முழுவதும் கழகக் கொடியாலும் தோரணங்களாலும் நிறைந்தி ருந்தது. பலூனால் அலங்கரிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு சங்கர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பேச்சு, கவிதை போட்டிகள் நடைபெற்று சுழற்கோப்பை பரிசளிக்கப்பட்டது. தோழர் குழலிசை பரிசு பெற்றார். அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவிக்க எழுச்சியோடு நிகழ்ச்சி நடைபெற்றது.
காக்கணாம் பாளையம்
காக்கணாம் பாளையம் பகுதியில் சிவ குமார் மற்றும் தமிழ்ச் செல்வன் தலைமை யேற்றனர். இனியாவது விழிப்போம்! இயற்கையோடு செழிப்போம்! எனும்இயற்கை மீட்பு அறக்கட்டளை சார்பாக மாலை அணி விக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.அக்ரி அரவிந்த் உடனிருந்தார்.
இலக்கிநாய்க்கன்பட்டி
இலக்கிநாய்க்கன்பட்டியில் சரவணன் மற்றும் லட்சுமணன் தலைமையில் கொடி யேற்றம், படத்திற்கு மாலை அணிவித்தல், இனிப்புகள் வழங்குதல் என உற்சாகமாக கொண்டாடப்பட்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப் பட்டது.
கெஜல்நாய்க்கன்பட்டி
கெஜல்நாய்க்கன்பட்டியிலும், ஆனந்தன் சாந்தி திருமண மண்டபம் உட்பட திருப்பத்தூரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களிலும் தொடர்ச்சியாக மாலை அணிவிக்கப்பட்டது.
இவ்வாறாக காலை தொடங்கி மாலை வரை மாவட்டம் முழுவதும் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் ஏழு வாக னங்களில் தோழர்கள் பயணித்து உற்சாகமாக சமூக நீதி நாள் விழாவை கொண்டாடினார்கள். திமுக பொறுப் பாளர் அண்ணா அருணகிரி இறுதிவரையிலும் உடனிருந்து நிகழ்வை சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment