தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் தருமபுரி மாவட்டத்தில் 10 இடங்களில் கழக கொடியேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் தருமபுரி மாவட்டத்தில் 10 இடங்களில் கழக கொடியேற்றம்

தருமபுரி, அக். 10- தர்மபுரி மாவட் டத்தில் தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாளை முன் னிட்டு 10க்கும் மேற்பட்ட இடங் களில் கழக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கழக கொடியேற்றம்

தந்தை பெரியார் மன்றத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் திரா விடர் கழக மாநில மகளிர் அணி செயலாளரும், பெரியார் மன்ற பொறுப்பாளருமான தகடூர் தமிழ்ச்செல்வி  கழகக் கொடியை ஏற்றினார்.

தருமபுரி-திருப்பத்தூர் சாலை சிவாஜி திருமண மண் டபம் அருகில் புதிதாக அமைக் கப்பட்ட  கொடிக்கம்பத்தில் மாவட்ட செயலாளர் மு. பரம சிவம் கழகக் கொடியை ஏற்றினார். மாவட்ட பகுத்தறிவு ஆசி ரியரரணி  தலைவர் கதிர் செந்தில்குமார் பெரியார் படத் திற்கு மாலை அணிவித்தார்.

தருமபுரி-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் உள்ள பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூண் கல்வெட்டு அருகே புதி தாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் தருமபுரி மண்டல தலைவர் .தமிழ்ச்செல்வன் கழகக் கொடியை ஏற்றினார். மேனாள் மாவட்ட இளைஞ ரணி தலைவர் காமலாபுரம் இராஜா பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்.

தருமபுரி-பென்னாகரம் நெடுஞ்சாலையில் உள்ள பெரியார் பாலம் அருகே பெரியார் பெருந் தொண்டர் கே.ஆர்.சின்னராஜ் நினைவாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் சின்னராஜ் அவர்களின் மகன் ஆசைத்தம்பி கழகக் கொடியை ஏற்றினார். நகர திராவிடர் கழகத் தலைவர் கரு.பாலன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அம் பேத்கர் சிலை அருகே அமைக் கப்பட்டிருந்த புதுபிக்கப்பட்டி ருந்த  கொடிக் கம்பத்தில் மாவட்ட கழக அமைப்பாளர் சேட்டு கழக கொடியை ஏற் றினார். டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளரும் அரூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான சா.இராஜேந் திரன், மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் . யாழ்திலீபன் ஆகியோர் மாலை அணிவித்தனர். தந்தை பெரியார் படத்திற்கு இளைஞர் அணித் தோழர்கள் அர்ஜுனன், .சம ரசம், ஏங்கல்ஸ், . பூபதி ராஜா, பிரதாப், ஆகியோர் மாலை அணிவித்தனர்.

பெரியார் படத்திற்கு மாலை

தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் சவுல்பட்டி சந்திப்பு சாலையில் சிகை அலங்கார உரிமையாளர் பிரபாகரன் கழகக் கொடியை ஏற்றினார். மருத்துவர் டாக்டர் கனிமொழி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் - கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி  இல்லத்தில்  அமைக்கப் பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மாநில ஆதிதிராவிடர் நலத் துறை திமுக துணை செயலாளர் .இராஜேந்திரன் கழகக் கொடி ஏற்றினார்.

இளைஞரணி மாணவர் கழகத் தோழர்கள் இணைந்து பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர் வருகை தந்த அனைவருக்கும் மருத்துவர் கனி மொழி இனிப்பு வழங்கினார்.

கடத்தூர் ஒன்றியம் சிந்தல் பாடியில் நடைபெற்ற கழக கொடியேற்று விழா நிகழ்ச்சியை திராவிட முன்னேற்றக் கழகத் தின் ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் சிந்தை குபேந்திரன் ஏற்பாடு செய் திருந்தார். மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் கழகக் கொடியை ஏற்றினார். பெரியார் படத்திற்கு கழகத் தலைவர் கி சிவாஜி, பெரியார் பெருந்தொண்டர் காந்தி என் கின்ற லோகநாதன், தீ.சிவாஜி, மு.சிவகுமார், ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

பென்னாகரம் கடைமடை கிராமத்தில் கழக கொடியேற்று விழா நிகழ்வு நடைபெற்றது. கழகப் பொதுக்குழு உறுப்பினர் .தீர்த்தகிரி கழகக் கொடியை ஏற்றினார். மருத்துவர் தியாக ராசன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார், கழக நிர் வாகிகள் அழகேசன், கோவிந்த ராஜ், சங்கரன் மற்றும் பலர்  இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

No comments:

Post a Comment