புதுடில்லி, அக்.1 கரோனா பாதிப்புக்கு பின், இந்தியாவில் உள்ள நகைக்கடைக்காரர்கள், தங்களுடைய பாரம்பரிய வணிக முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதையடுத்து, இணையம் வாயிலாக 100 ரூபாய்க்கு கூட தங்கத்தை விற்க தயாராகி உள்ளனர்.
கடந்த ஆண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, தங்க நகைகள் விற்பனை கடுமையான பாதிப்பை சந்தித்தன. இப்போது இணையம் வாயிலான விற்பனை முயற்சியில் நகைக்கடைகள் இறங்கி உள்ளன. டாடா குழுமத்தைச் சேர்ந்த, தனிஷ்க் துவங்கி, பல உள்நாட்டு தங்கநகை விற்பனையாளர்கள், டிஜிட் டல் தங்க தளத்துடன் கூட்டு வைத்து, இணையம் வாயிலாக 100 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகைக்கு கூட, தங்கத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளனர்.
நுகர்வோர், குறைந்த பட்சம் 1 கிராம் அளவுக்கு முதலீடு செய்ததும், அவர் கள் விரும்பினால் தங்கம் விநியோகம் செய்யப்படுகிறது. இணையம் வாயிலான தங்க விற்பனை இந்தியாவுக்கு ஒன்றும் புதிதானது அல்ல எனினும், நகைக்கடைக்காரர்கள் இது வரை தள்ளியே இருந்தனர்.
இப்போது அவர்களும் இந்த புதிய வணிக முறைக்கு வந்துள்ளனர்.இளம் தலைமுறையை சேர்ந்தவர்கள், இணையம் வாயிலாகவே பொருட்களை வாங்க விரும்புவது, இவர் களுக்கு புதிய வழியை காட்டி உள்ளது.
No comments:
Post a Comment