சென்னை, அக்.10 வருகிற 1ஆம் தேதி முதல் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக் கையை அனுப்பியுள்ளது.
* ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக் கேற்றவாறு முகக் கவசம் இருப்பதையும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வ தற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்ப பரிசோ தனை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளியிலும் மாண வர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்.
சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள்
* மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வகுப்பறை களில் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு ஏற்றவாறு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
* அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் கரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலுக்கு ஏற்ப வேலைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம், குறைக்கப்பட்ட பாடங் கள் மற்றும் அடிப்படை பாடங் களுக்கு மாணவர்களை தயார் செய்தல் வேண்டும்.
* ஒவ்வொரு பள்ளியின் தலைமை யாசிரியர், ஆசிரியர்கள் அனைத்து வகை யிலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழுப் பொறுப்பு ஆவார்கள்.
உளவியல் ரீதியாக...
* நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாணவர்கள் நேரடி வகுப் பில் கலந்து கொள்ள இருப்பதால் அவர் களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி, எளிதில் அணுகுவதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை
ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.
* வாய்மொழி பயிற்சி, எழுத்து பயிற்சி, கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
இதனை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment