சியோல், செப். 30- அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும் பன்னாட்டு நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வட கொரியா அணு ஆயுதங்கள் மற் றும் ஏவுகணைகளை தொடர்ச்சி யாக சோதித்து அண்டை நாடு களை அச்சுறுத்தி வந்தது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2018ஆ-ம் ஆண்டு அமெரிக் காவின் அப்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசிய பிறகு வட கொரியாவின் போக்கு மாறியது.
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவு கணைகளை சோதிப்பதை வட கொரியா நிறுத்தியது. ஆனால் கடந்த 2019ஆ-ம் ஆண்டு அமெ ரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண் டும் ஏவுகணை சோதனைக்கு திரும்பியது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக வடகொரியா அடுத் தடுத்து புதிய ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. இதில் நடுத் தர, தொலைதூர மற்றும் ரயிலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணை களும் அடங்கும்.
அதன் தொடர்ச்சியாக வட கொரியா புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்தது. வட கொரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஜகாங் மாகாணத் தில் உள்ள மலைப்பாங்கான பகு தியில் இருந்து கிழக்கு கடற் கரையை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் வடகொரியா தற் போது சோதித்துள்ள ஏவுகணை எந்த வகையை சேர்ந்தது என்பது உறுதி செய்யப்படாத நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்யும்படி தென்கொரியாவின் தேசிய பாது காப்பு கவுன்சிலுக்கு அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளையில் வடகொரியா சோதித்த ஏவுகணை அய்.நா. பாது காப்பு கவுன்சிலால் தடை செய் யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என ஜப்பான் பிரதமர் யோசிஹைட் சுகா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க ராணு வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘வடகொரியாவின் தற்போதைய ஏவுகணை சோதனையால் அமெ ரிக்க பணியாளர்களுக்கோ அல் லது எங்கள் கூட்டாளிகளுக்கோ உடனடி அச்சுறுத்தல் இல்லை. தென்கொரியா மற்றும் ஜப்பானின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி யாக உள்ளது’’ என கூறப்பட்டு உள்ளது.
இந்த ஏவுகணை சோதனை குறித்து வடகொரியா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்பட வில்லை. அதே வேளையில் தம் மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று அய்.நா.வுக்கான வடகொரியாவின் தூதர் கிம் சாங் அய்.நா. பொதுசபை கூட்டத்தில் பேசிய சூழலில் இந்த சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதோடு கொரியப்போரை முறைப்படி முடிவுக்கு கொண்டுவர தென்கொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா தலை வர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கடந்த சில தினங் களுக்கு முன்பு அறிவித்த நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
முன்னதாக அய்.நா. பொது சபை கூட்டத்தின் கடைசி நாளில் உரை நிகழ்த்திய அய்.நா.வுக்கான வடகொரியா தூதர் கிம் சாங் வட கொரியா விவகாரத்தில் அமெ ரிக்கா தொடர்ந்து தனது விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அமெரிக்கா தென் கொரியாவுடன் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment