பிரதமருக்கு கடிதம்! பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, செப்.3- பொதுத்துறை நிறு வனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல. இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதவிருப்பதாக சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற் றிய உரை வருமாறு:-
பொதுத் துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரை யாற்றி, அதற்கு தொழில்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள். எனவே, நானும் அது குறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
நம் நாட்டினுடைய பொதுத் துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச் சொத்தாகும். நமது நாட்டினு டைய பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் சிறு குறு தொழில்களின் ஆணிவேராக விளங்கக்கூடிய வகையில் வடிவ மைக்கப்பட்டிருக்கக் கூடிய பெருந்தொழில் நிறு வனங்கள் அவை என்பது எல்லோருக்கும் தெரியும். இலாப நோக்கம் மட்டுமே குறிக் கோளாக இல்லாமல், மக்கள் நலன் கருதி இயங்கி வரக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடைய கருத்து.
எனவே, ஒன்றிய அரசினு டைய பொதுச் சொத்துக் களைத் தனியார்மயமாக்கும் போக்கினை எதிர்க்கக்கூடிய வகையிலே, பிரதமர் அவர் களுக்கு நான் இதைச் சுட்டிக் காட்டி, நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூடிய வகையில் கடிதம் எழுதவிருக்கிறேன் என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
No comments:
Post a Comment