பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

பகுத்தறிவாளர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

சென்னை, செப்.3 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பெரியார் உயராய்வு மய்யம்  இணைந்து 20.08.2021 முதல் 29.08.2021  வரை 10 நாள்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நாள்தோறும் மாலை 6.30 மணி முதல் 7.45 மணி வரை இணைய வழியாக நடத்தியது.பல்வேறு தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் பாடம் நடத்தினார்கள்.

30.08.2021 அன்று மாலை 7.00 மணி முதல் 8.00 வரை இணைய வழியாக தேர்வு நடந்தது.மாவட்டங்களை நான்காக பிரித்து நான்கு வகுப்புகள் ஒரு நாளைக்கு நடந்தது .நான்கு வகுப்புகளில் கலந்து கொண்டோர் 234 பேர்.அதில் வருகை பதிவு அடிப்படையில் 132 பேர் தேர்வு எழுதினார்கள்.

நிறைவு விழா  31.08.2021 அன்று மாலை 6.00 மணி அளவில் இணைய   வழியாக நடந்தது. மாநில பகுத்தறிவாளர் கழகத்   தலைவர் மா.அழகிரிசாமி தலைமை ஏற்றார். மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் எஸ்.ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.இணைப்புரை பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் வழங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநிலபொருளாளர் முனைவர் சி .தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர்கள் தரும.வீரமணி,மா.ஆறுமுகம் ,.மணிவண்ணன்,கே .டி.சி.குருசாமி , .சரவணன் , பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் , பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் முனைவர் எஸ்.அருள்செல்வன்  ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்தலைவர் வா.நேரு, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்கள்.பயிற்சி குழுக்களின் சார்பில் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர்கள் .தா.சண்முகசுந்தரம்,கு.ரஞ்சித்குமார்,கோபு.பழனிவேல்,கா.நல்லதம்பி ஆகியோர் பேசினார்கள்.பயிற்சி பெற்றோர் சார்பில் சேலம் ஆசிரியர் பி.டி.கோமதி உதவி பேராசிரியர், .  ராஜ்மோகன்,தட்டச்சர் சு.இந்திரா, பேராசிரியர் கந்தசாமி பாண்டியன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

பயிற்சியாளர்களை பாராட்டி பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர்  நம்.சீனிவாசன்,பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு  உறுப்பினர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பேசினார்கள். திராவிடர் கழகத் தலைவரும்,பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நிறைவு விழா பேருரை ஆற்றினார்கள்.பின்னர் பயிற்சியாளர்களின் கேள்விகளுக்கு  விடை அளித்தார்கள். பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் வா.தமிழ் பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment