அ.இ.அ.தி.மு.க. மேனாள் அவைத் தலைவரும், தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞருமான மானமிகு. புலவர் புலமைப்பித்தன் (வயது 85) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அன்னை நாகம்மையாரைக் குறித்து ஒரு கவிஞர் சிறுமைப்படுத்திக் கூறிய நேரத்தில் என் பாதக்குறடு என் கைக்கு வரும் என்கிற அளவுக்குச் சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவும் கொண்டவர். பாவேந்தர் பிள்ளைத்தமிழ் எழுதியவர். சிறந்த திரைப்படப் பாடல் ஆசிரியர் - அவரின் மறைவு திராவிட இயக்கத்திற்கான இழப்பு.
அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், திராவிட இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.9.2021
No comments:
Post a Comment