சேலம்,செப்.2- சேலத்தில் ஞாயிறு (29.8.2021) காலை 11 மணியளவில் பொன்னம்மாப் பேட்டை ஏவிஎம் திருமண மண்டபத்தில் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமையில் திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தி ருந்த அனைவரையும் வரவேற்று சேலம் மாநகர செயலாளர் பா.வைரம் உரையாற்றி னார். கூட்டத்திற்கு சேலம் மாவட்ட தலைவர் கே.ஜவகர், செயலாளர் அ.ச.இளவழகன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருட்டிண மூர்த்தி, செயலாளர் கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்
தொடக்க உரையாற்றிய கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகளிடம் தனித்தனியே தாங்கள் கற்றுக்கொண்டதை கேட்டறிந்து இன்றைய மாணவர்கள் மேல்படிப்பு வரை கல்வி பயின்றிடவும், அரசு வேலை வாய்ப்பு களை பெற்றிடவும் நமது சமுதாயம் எவ்வாறு இழிவு படுத்தப்பட்டிருந்தது அந்த இழிவை துடைத்தெறிய அறிவாசான் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய அரும்பணிகள் குறித்தும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
நமது பெற்றோர்கள் மற்றும் அவரது பெற்றோர்களால் ஏன் கல்வி பயில முடிய வில்லை, அரசாங்க பணிகளுக்கு செல்ல முடியவில்லை அதற்கு முட்டுகட்டையாக இருந்தவை எல்லாம் எவை? அவை யெல்லாம் உடைத்தெறிய பாடுபட்ட இயக்க மான திராவிடர் கழகத்தின் சிறப்புகள் குறித்தும் அந்த இயக்கத்தின் தலைவரான தந்தைபெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவருக்கு பிறகு இன்று தலைமை ஏற்றிருக்கக் கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டறம் பற்றியும் எடுத்துக்கூறி, நம்மை எப்படி இழிமக்களாக ஆக்கி வைத்துள்ளனர், நம்மீது திணிக்கப் பட்ட சூத்திரபட்டத்தை துடைத்தெறிய ஆசிரியர் தலைமையில் தந்தைபெரியார் விட்டுசென்ற பணிகளை செய்துமுடித்திட மாணவர்கள் அணிதிரள வேண்டும் என வேண்டுகோள்விடுத்து உரையாற்றினார்.
பரிசு, சான்றிதழ், இயக்க வெளியீடுகள் வழங்கல்
பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளை யண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, சேலம் மண்டல தலைவர் சி.சுப்ரமணியன், மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், சேலம் மாவட்ட தலைவர் கே.ஜவகர், செயலாளர் அ.ச.இளவழகன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, செயலாளர் கா.நா.பாலு ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், புத்தகங்களையும் வழங்கி சிறப்பு செய்தனர்.
பெரியார் செல்வன் தனது சிறப்புரையில்
மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அவர்கள் இந்த இந்தியாவை இருநூறு ஆண்டுகளாக ஆட்சிசெய்த முகலாயர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் கல்விகற்க வேண்டி பொன்னும், பொருளும் கொடுத்து அவர் களது முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை செலுத்திவந்தனர். மற்ற மக்களை அடிமைப் படுத்தி பார்ப்பனர்களுக்கு சேவை செய்ய வைத்தனர். பிறகு இந்தியாவை கைப்பற்றிய பிரிட்டிஷ்காரர்கள் இங்குள்ள ஏற்றத் தாழ்வுகளை கண்டு அனைத்து மக்களையும் சமமாக மதிக்க ஆரம்பித்தனர். அனை வருக்கும் கல்வியறிவை வழங்கினார்கள் என்ற வரலாற்று செய்திகளை யெல்லாம் மாணவர்களிடையே எடுத்து ரைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் கல்வி கற்ற விதத் தையும் அவர் லண்டனிலிருந்து இந்தியா திரும்புகையில் அவருடன் எடுத்துவரப்பட்ட புத்தகங்கள் எல்லாம் குண்டுவீச்சால் அழிந்த தையும் உலகிலேயே தான் படித்த புத்தகங் களை ஒரு கப்பல் அளவிற்கு வைத்திருந்த ஓர் மகத்தான தலைவர் அண்ணல் அம் பேத்கர் மட்டுமே என்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அவரது பங்கு மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தமிழ் நாட்டின் கல்வியறிவு வெறுமனே ஒரு சதவீதம் மட்டுமே இருந்தது. அதன் பிறகு தமிழ் நாட்டை ஆட்சி செய்த திராவிட இயக்கங்களால் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் 57 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். அதற்கு காரணம் திராவிட ஆட்சிகளே.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தந்தைபெரியார் நம்மின மக்களுக்காக போராடிய எண்ணற்ற போராட்டங்கள் குறித் தும் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து அதன் பிறகு திராவிடர் கழகமாக மாறியதும் தந்தைபெரியாரின் மாணவரான அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று திராவிட முன்னேற்ற கழத்தை உருவாக்கி அரசியலில் நின்று வெற்றிபெற்று பெரியார் அவர்களின் கொள்கைகளுக்கு சட்ட வடிவம் கொடுத்ததையும், அவரை தொடர்ந்து வந்த தலைவர் கலைஞர் அவர் களும் பெரியார் கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுத்துவந்ததையும், தமிழ்நாடு முழுவதும் பெரியார் சமத்துவபுரங்களை நிறுவியதையும், அதன் தொடர்ச்சியாக திராவிட ஆட்சியான தளபதி ஸ்டாலின் தலைமையேற்ற திமுக அரசு ஜாதி தீண் டாமை குடிகொண்டிருக்கும் கடைசி இட மான கருவறையில் சட்டப்படி பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராலாம் என்று சட்டம் இயற்றி அதை செயல்படுத்தி தந்தைபெரியாரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய தகவல்களையெல்லாம் மாண வர்கள் மத்தியில் எடுத்துக்கூறி திராவிடம் தான் நம்மை காக்கும் அரண் என்பதை எடுத்துரைத்த பாங்கு மிகவும் அருமை. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தங்களது பெற்றோர்களிடம் பாசத்தோடு நடந்துகொள்ளவேண்டும.
இறுதி வரை பெற்றோரை கைவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பெரியார் உலகத்திற்கு அனுமதி
நிகழ்ச்சியின் இறுதியில் கழக மாநில அமைப்பாளர் தமிழர் தலைவரிடம் இருந்து வந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லி நான்கு ஆண்டுகளாக அதிமுக அரசால் கிடப்பில் போடப்பட்ட சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்தில் தந்தை பெரியாருக்கு அமையவுள்ள 135 அடி உயர சிலை அமைத்திட தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது என்ற செய்தியை சொல்ல அரங்கத்திலிருந்த கழக தோழர்கள், மாணவர்கள் தந்தை பெரியார் வாழ்க, தமிழர்தலைவர் வாழ்க என்று முழக்கமிட்டு, கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர். சேலம் மண்டல மாணவர் கழக செயலாளர் இ.தமிழர் தலைவர் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது. அனைவருக்கும் சிறப்பான மரக்கறி உணவு வழங்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப்பிறகு சேலத்தில் அதிகளவு மாணவர்களை பங்கேற்க செய்து பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், சான்றிதழ் வழங்குதல், இயக்க நூல்கள் (பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 60 மாணவர்களுக்கும் 16 தலைப்புகள் கொண்ட புத்தக தொகுப்பு ), சந்தா வழங்குதல், புதிய இளைஞர்களை இயக்கத்தில் இணைத்தது என திராவிட மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை சேலம் மாநகர செயலாளர் பா.வைரம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது கழக பொறுப்பாளர்களிடம் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி முடிந்து இல்லம் திரும்பும் நிலையில் மாநகர செயலாளர் வைரத்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட கல்லூரி மாணவிகள் மூவர் தங்களை திராவிட மாணவர் கழகத்தில் இணைத்துகொள்கிறோம் என்று தெரிவித்தது இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த பெருவெற்றி.
திராவிட மாணவர் கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
சேலம் மாவட்டம்: அமைப்பாளர்: ச.திராவிட முருகன்
சேலம் மாநகரம்: தலைவர்: பெ.அரவிந்தன், செயலாளர்: வெ.ரங்கதுரை, அமைப்பாளர்: வி.குணால்
ஆத்தூர் மாவட்டம்: இணை செயலாளர்: சு.தமிழ்மதி
மேட்டூர் மாவட்டம் கல்லூரி அமைப்பாளர்: சே.சரவணன், அரசு மேல் நிலைப்பள்ளி அமைப்பாளர்: எம்.அரிகரன்
சந்தா வழங்கல்
மாநகர செயலாளர் பா.வைரம் - பெரியார் பிஞ்சு 5 சந்தா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சுரேசு - விடுதலை 1 ஆண்டு சந்தா
No comments:
Post a Comment